ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வையும், போராட்டக் குணத்தையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்த ஈழத்தமிழர் ஆதரவுப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார்.
தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்த இவர் 80 களின் தொடக்கத்தில் கவிஞர் காசியானந்தனின் பாடல்களைப் பாடி, தனது முதல் ஒலிப்பேழையை வெளியிட்டார்.
பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை ஊட்டும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
பாசறைப்பாணர் என்று அன்போடு அழைக்கப்படும் தேனிசை செல்லப்பா, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது குரலால் வலுச்சேர்த்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. (Photo curtsy Social Media)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.