சக்தி விரதமாகிய நவராத்திரி விழா அக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமானது. வருகின்ற 23 ஆம் திகதி சூரன்போரும், 24 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது. படம் - கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகும் நவராத்திரி விழா, வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி கோவில்.
அன்னையாம் எம் சக்தி தெய்வத்திற்குரிய, நவராத்திரி விரத கால விசேட பூசை வழிபாடுகள், சைவப் பெருமக்களால் மிகுந்த பக்தி சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும் தன்மையில், இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையிலும் வழமை போல மிகுந்த பக்தி உணர்வுகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன. சக்தி மீது மிகுந்த பக்தி செலுத்தி அவளை உரியமுறையிலே மனங்கொண்டு, அவளுக்குரியதான நவராத்திரி விரத நிகழ்வினைப் பெருந்தொகையான பெண்மணிகள் மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நவராத்திரி விரத கால விசேட பூசை, வழிபாடுகள் இவ்வூரிலுள்ள புகழ்பூத்த ஆலயங்களான வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில் ) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் (அம்மன் கோவில்) ஆகியவற்றில் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. இவை தவிர , இப்பகுதியில் ஆங்காங்கே அமைந்துள்ள வழிபாட்டிற்குரிய சக்தி ஆலயங்களிலும் இவ்விசேட பூசை வழிபாடுகள் அவ்வக்காலங்களில் உரியமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தவிர இப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகள், படிப்பகங்கள், தனியார் கல்விக்கூடங்கள் ஆகியவற்றிலும் அவற்றின் வசதிகளுக்கேற்ப உரியமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்விரத கால நாள்களில் வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியனவற்றில் சூரன் போர், மானம்பு ஆகிய விசேட நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.