மணிக்கு 210 Km வேகத்துடன் காற்றுடன் நகரும் புயல் பயிலின் இன்று மாலை ஆந்திதிரா - ஒரிசா கரையைக் கடக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி உருவாகியிருந்த தாழமுக்கமானது மிகக் கடும் புயலாக மாறி (Very severe cyclonic storm), வங்காள விரிகுடாவில் வடமேற்குத் திசையாக நகர்ந்து, இன்று மாலை ஆந்திதிரா - ஒரிசா கரையைக் கடக்கவுள்ளது.
தற்பொழுது மணிக்கு 210-220 Km வேகத்தில் வீசும் காற்றுடன், புயல் பயிலின் ஆனது தற்பொழுது 6 கடல்மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடைப்பட்ட கரையோரப் பிரதேசங்களான 'கலிங்கபட்டினம்' மற்றும் 'பாரதீப்' ஆகிய துறைமுகங்களுக்கிடையிலான பகுதிகளைக் கடக்கவுள்ள இப்புயல் பயிலின் (Phailin), கரையைத் தாண்டியவுடன் மிக வேகமாக நகர்ந்து வலுவிலக்கவுள்ளது. ஆனாலும் இப்புயலானது ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரைப் பிரதேசங்களில் குறிப்பிடக்கூடிய சேதங்களை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.