முல்லைதீவிற்கு கிழக்காக தற்பொழுது சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர தாழமுக்கத்தையடுத்து யாழ் மாவட்ட கரையோரப்பகுதி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் புயல் எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டுவருகின்றது. போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தீவிர தாழமுக்கத்தையடுத்து காரணமாக கடல் கொந்தளிப்பாகவும் மற்றும் மன்னார் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு கடலில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கரையோரத்தில் வசிக்கும் மக்கள் 100 மீற்றர் தூரம் வரை விலகியிருக்குமாறு போலீசாரினால் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்கத்தினால் சுமார் 200 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் எனவும் கடல் அலை சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு மேலெழும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவில் கரையோரக் கடல் கொந்தளிப்பு கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக முல்லைத்தீவில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகின்றது. இதன் காரணமாக கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராம மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஏற்படும் கடல் அலையால் கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுகின்றது.
யாழ்ப்பாணத்தில் மழை மூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக தற்பொழுது ஒராளவான மழை பெய்துவதையும் அவதானிக்கக் கூடியாதாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.