பல துறை கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தன்), அவரின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் சிலைவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலைக்குரிய செலவினை குமார் ஆனந்தனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வழங்கவுள்ளதாகவும், சிலை அமைக்கும் பணியினை வல்வையைச் சேர்ந்த சில நலன் விரும்பிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
முன்னாள் சட்டத்துறை மாணவரான குமார் ஆனந்தன் அவர்கள், 1971 ஆம் ஆண்டில் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணையை இருவழி கடந்து சாதனை படைத்ததன் மூலம் தொடர்ந்து பல ஆச்சரியப்படவைக்கும் கின்னஸ் சாதனைகளை மேற்கொண்டிருந்தார். இறுதியாக ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாயை (English Channel) கடக்கும் முயற்சியின் போது மரணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் ஆனந்தன் பற்றி எம்மால் தற்பொழுது தொகுக்கப்பட்டுவரும் அவரின் முழு விபரங்களையும் விரைவில் எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ஒஆர்.யி பிரசுரிக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.