Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

நாளை நவரத்தினசாமி பாக்கு நீரிணையைக் கடந்ததன் வைரவிழா தினம்

பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2014 (திங்கட்கிழமை)
வீரம் விளைந்த விறல் மன்னன் வல்வை தந்த நவரத்தினசாமி அவர்கள் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த சாதனையின் வைரவிழா (25.03.2014)
 
புகழொடு தோன்றிய மண்ணின் மைந்தர்களை சாதனை படைத்த வீரர்களை இந்த மண் மறக்கமாட்டாது, மறக்கவும் கூடாது.
 
நுரைத்தடிக்கும் நீலத்திரைக்கடல் தழுவிய மண் வல்வெட்டித்தறை. நெய்தல் நிலம் நெஞ்சம் தழுவிய அன்புக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற மண் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரங்களும் இதற்கு சான்று பகரும்.
 
வேல் கொண்ட சந்நிதி முருகன் எழுந்தருளியிருக்கும் தெய்வகடாட்சமும் வெற்றியின் சாயலும் பொருந்த இலங்கையின் வடபால்கடலோரத்தில் அமைந்துள்ள தொண்டைமானாற்றிலே வீரன் முருகுப்பிள்ளை நவரத்தினசாமி 1909ம் ஆண்டு ஆவணித்திங்கள் 16ம் நாள் அவதரித்தார். சொல் நாம வல்வெட்டி என்னும் பெயரை சொல் வெற்றித்துறையென்று கொண்டால் என்ன என பண்டிதர் ஆசிநாதன் வினாவெழுப்பியதுண்டு. அந்த மண்ணிலே ஆழி தழுவிய அற்புதத் திருமண்ணில் வல்லாளன் முதற் குதித்து நீந்திச் சென்று வளமான வெற்றியையும் ஈட்டித் தந்தான்.
 
 
நவம் என்றால் புதுமை என்று பொருள். வெற்றித் திருமண்ணில் உதித்த புதுமை பொலி இரத்தினம் நாட்டில் வியத்தகு சொத்தானான். வெள்ளை மணற் பரப்பில் விளையாடிய வித்தகன் கொள்ளை உள்ளத்தோடு நீலக் கடலலைகளை நாளும் பார்த்திருக்கிறான். பரதகண்டத்தையும் இலங்கை மாதாவையும் பிரிக்கும் பாக்கு நீரிணையை பலமுறை பார்த்திருக்கிறான். நிலத்திலே விளையாடுவது போல் நீலக்கடலிலே கடலலைகளுடன் விளையாடிப் பயிற்சி பெற்றிருக்கிறான். நீண்ட நெடுநாளைய இலட்சியத்தை நிறைவேற்ற 1954ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி பிற்பகல் 4மணிக்கு வல்வையம்பதிக் கடலிலே இறங்கினான். அடுத்தநாள் 26ம் திகதி பிற்பகல் 7மணிக்கு கோடிக்கரையை அடைந்து உலக சாதனையை நிலைநாட்டினான்.
 
மலைபோன்ற அலைமோதும் மகாசமுத்திரத்தை மனோதைரியத்துடன் பிளந்து சென்று கரையேறிய இம்மானிடப் பிறவியைப் பற்றி எம் மனத்திலெழும் மகிழ்ச்சிக்கு கங்கு கரையில்லை. வேளாச்சுறாக்கள், திருக்கைகள், கடல்பாம்புகள், கொடிய சொறிகள் போன்ற தீங்கிழைக்கக் கூடிய பல ஜெந்துக்களை மனோதிடத்துடன் வெற்றி கொண்டு சுழி, நீரோட்டம் என்பவற்றின் அபாயங்களுக்கு உபாயங்களைக் கண்டு இலட்சியத்தைப் பூர்த்தி செய்த மறத்தமிழன். தமிழர்கள் செஞ்சங்களில் எல்லாம் காலத்தை வென்று நிறைந்து நிற்க வேண்டியவன், நிறைந்து நிற்பான்.
சகிப்புத்தன்மை, திடசங்கற்பம் என்பவற்றை தனது இரு கண்களாகக் கொண்டவர் நவரத்தினசாமி. அரும்பெரும் விஞ்ஞானிகள், இமயம் தொட்ட தென்சிங், பாக்கு நீரிணை தாண்டிய நவரத்தினசாமி ஆகியோர் எதனையும் சாதிக்கலாம். முடியாது என்பது கிடையாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டனர். 
 
கோடிக்கரையை நோக்கிய பயணத்தின் முன் 
 
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் பெருமை கொள்ளத்தக்க நற்றவப் புதல்வன் நவம். ஈழநாட்டு மக்களுக்கும் வல்வெட்டித்துறையை வெல்வெற்றித்துறையாக்கிய பெருமைக்கும் மூலமூர்த்தியாய் திகழ்ந்தவர் நவரத்தினசாமி.
 
அரிது அரிது மானிடராதல் அரிது என்ற ஒளவையின் பொன்மொழிக்கு ஈடுகொடுத்து ஞானமும் கல்வியும் நயத்தந்து சாதனை வீரனாக நிமிர்ந்து நின்றமை நீண்ட பயிற்சியின் முதிர்வென்பதை முழு உலகமும் அறியும்.
 
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர்' என்ற வள்ளுவன் வாக்கிற்கு எடுகோளாக இலங்கிய இலங்கைத் தமிழனை - ஈழத்திருமகனை வல்வையின் எல்லையில்லா ஆற்றலனை முழு உலகமுமே போற்றியது. சாதனைக்கு எல்லையில்லை என்பதால் தனது 60ஆவது அகவையில் (16.08.1969) இலங்கையைச் சுற்றிவர கட்டுமரத்தில் பயிற்சி பெற விரும்பினார். தொண்டமானாற்றுக் கடலில் 760 மைல் சுற்றிவரப் பயிற்சியில் ஈடுபட்டார். தாளாத முயற்சியும், கலையாத துணிவும் கொண்ட நவரத்தினசாமி காலத்தின் கட்டளையால் புகழ் தந்த திரைக்கடலில் தனது பயிற்சியின் போதே (01.07.1969) மூழ்கி மரணிக்கலானார்.
 
மூத்த புதல்வன் இராமச்சந்திரனும் அடுத்த புதல்வன் பாலச்சந்திரனும் (பின்னாளில் - தனது பதினாறு
வயதில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் நீந்தி சாதனை படைத்தவர்) இலங்கை தேசியக்
கொடியை பிடிக்க நீச்சல் வீரன் நவரத்தினசாமியுடன் இணைந்து இளையமகன் ஞானச்சந்திரன் சூரிய
நமஸ்காரம் செய்து வல்வெட்டித்துறை துறைமுகத்தில் சாதனைப் பயணத்தை ஆரம்பிக்கும் காட்சி
 
கோடி கல்லாலே எறிதலைப்போல் அலைகள் பாய கையாலும் காலாலும் அவற்றைத் தாக்கி நல்லாண்மை நெஞ்சினொடு பாக்கு நீரிணையை கடந்த செம்மலின் நிறைவுநாள் குறிக்கோள் குறிதவறியது மனதிற்கு வேதனைதான். சலப்பிரியனான நவரத்தினசாமி தான் கடலின் அரசனெனக் கண்ட தமிழுலகம் போற்றி நாற்றிசையும் புகழ் மணக்க ஏற்றி வைத்தது. வேதாரணியத்தில் வரவேற்பு விழா, வாழ்த்தொலி ஈழநாட்டில் வெற்றி விழாக்கள் இவை அன்றைய நிகழ்வுகள். 5000 ஆண்டுகளுக்கு முன் வங்கம் கடந்து வளமார் கடல் தாண்டி எங்கும் வணிகம் புரிந்து பொருளீட்டிய தமிழன் வழித்தோன்றல் நவரத்தினசாமி தமிழ் மண்ணின் தவப்புதல்வன். மறைவாக நமக்குள்ளே பழங்கதை பேசும் பழக்கத்தை ஒழித்து பிறநாட்டார் நம் வீரத்தை போற்ற வேண்டும், தியாகச் செயலை திறனாய்வு செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை உள்ளங்களில் உதிக்க வைத்த உத்தமன் எங்கள் நாட்டின் முத்து, அன்றியும் புகழ் நாட்டிய சொத்து எனலாம்.
 
அலைகடலில் வீரம் விளைத்த வித்தகன். கணிதம், தொழில்நுட்பம் என்பவற்றிலும் வித்தகனாக விளங்கினார். ஆக்கத்திறன் மிக்க அறிவாற்றல் பெற்றிருந்தார். அதனைச் செயலிலும் காட்டினார். கலையார்வம் மிக்க கண்ணியவான். 1950ல் வானொலி மூலம் இவரது கணித விவேகம் மக்கள் முன் கொண்டுவரப்பட்டது.
 
 
அமரர் நவரத்தினசாமி வாழ்ந்த காலத்தில் வரையப்பட்ட பாக்குநீரிணையை மையமாகக் கொண்ட விவரணப்படம்
 
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்றும், மேழிபிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை என்றும் போற்றுவர். அந்த வகையில் விவசாய திணைக்களத்தில் தனத 19 வயதில் வேலைக்கு அமர்ந்து வியத்தகு சாதனைகள் படைத்தார். தொழில்நுட்பத் திறனால் நவீன இயந்திரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
 
பல்துறை விற்பன்னராகத் திகழ்ந்தவரின் எச்சங்கள் பற்றி இவ்விடத்தில் சிந்தித்தல் சாலப் பொருந்தும் ஏனெனில் 'தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்' என்பது வள்ளுவன் வாய்மொழியாகும். முத்தென முகிழ்ந்த மூன்று புதல்வர்களில் ஒருவரான பாலச்சந்திரன் கைகளையும், கால்களையும் கட்டிய வண்ணம் 21.07.1963ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு ஆழமான 1500 அடி அகலமான ஊர்காவற்றுறைத் துறைமுகத்திற்கும் காரைநகர் துறைமுகத்திற்கும் இடையிலுள்ள கடல் நீரோட்டத்தைக் குறுக்கறுத்து நீந்திக் கடந்து சாதனை நிலை நாட்டினார்.
 
ஒரு சந்தர்ப்பத்தில் தந்தை பாக்கு நீரிணையைக் கடக்க தவறினால் தானே முயன்று அச்சாதனையை நிலைநாட்டுவேன் என்று பிரதிக்ஞை செய்தார்.
 
'மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்பது வள்ளுவமாயிற்றே. துணிச்சல் மிக்க சிறுவனுக்கு சாதனை நிலைநாட்டும் போது வயது பதினாறே. வையகம் வியக்க இல்லறம் புகுந்து நன்மகட்பேறு பெற்று வாழ்ந்த வரலாறுண்டு. அதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் கல்வியினைப் பயின்ற ஹாட்லிக் கல்லூரியில் இயல், இசை, நாடகத்துறைகளில் சீர் பெற்றவராக விளங்கி அதிலும் செம்மையுற விளங்கினார் எனலாம்.
 
இவை தவிர விளையாட்டுத்துறையிலும் தனது வீரவேகத்தைக்காட்ட பின்நிற்கவில்லை. தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகத்திலும் ஒரு முன்னணி வீரராகத்திகழ்ந்தார். கல்வியிலும் சிறந்து விளங்கிய அவர் மேற்படிப்பை முடித்துக்கொண்டு 1972ம் ஆண்டளவில் நெல் சந்தைப்படுத்தும் சபையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையேற்று அதனையும் செவ்வனே செய்து கொண்டு வந்தார்.
 
 
இவரது சாதனையைப் பாராட்டி 'பிரித்தானியப் பேரரசின் வெற்றிப் பதக்கத்தை' பெற்றுக் கொள்ள இராணிமாளிகைக்கு வருமாறு இலங்கைக்கான ஆளுனரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பிதழ்
 
இவ்வாறாகக் காலம் கைகூடியதும் 1975ம் ஆண்டு சர்வாங்கநாயகி என்பவரை வாழ்க்கைத்துணைவியாக ஏற்று, அவர்களும் பத்தாவிற்கு ஏற்ற பதிவிரதையாக இல்லறத்தை இனிதே நல்லறமாக நடாத்தி வந்தவர். இனிதாக மலர்ந்த இல்வாழ்வில் நான்கு புத்திரர்களையும் பெற்று தந்தையாக இருந்து மக்களுக்கு ஆற்றவேண்டிய நற்கடனாகிய நெறியையும் தன் பிள்ளைகளுக்கு ஆற்றி அவர்களை கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக்கினார்.
 
இவை மட்டுமன்றி மூத்த புதல்வனுக்கு தன் தந்தையாரது பெயராகிய நவரத்தினசாமி என்னும் பெயரையே சூட்டி அவரும் ஒரு பட்டதாரியாகி உயர்வதற்கும், இரண்டாவது புதல்வன் நவநீதன் திரைகடலோடியும் திரவியம் தேடு என்னும் முதுமொழிக்கு அமைவாக லண்டன் சென்று உயர்வதற்கும், மூன்றாவது மகன் நவஜீவன் நிலஅளவை விஞ்ஞான பீடத்தில் கற்பதற்கும், நான்காவது மகன் ஹரிகரன் மருத்துவ பீடத்தில் கற்பதற்கும் (தற்பொழுது வைத்திய கலாநிதியாக உள்ளார்), அன்னாரதும் அன்னார் 1997ல் அமரராகிய பிற்பாடு அதி உந்துசக்தியாக இருந்த அன்னையினதும் வழிகாட்டலுமே அக்குடும்பத்தின் அழகிய ஒளி பிரகாசிக்கக் காரணமாயிற்று. இன்று அன்னார் அமரராகிய போதிலும் இப்பூமியில் மக்களுக்கு, தன் குடும்பத்திற்கு செய்யவேண்டிய செயற்கரிய கடமைகள் யாவும் இனிதே நிறைவேற்றி அக்குடும்பத்தவரின் மனங்களில் மட்டுமன்றி மக்களின் மனங்களிலும் மங்காத ஒளிதீபமாக என்றும் பிரகாசிப்பார் என்பதில் ஜயமில்லை.
 
     நவரத்தினசாமி பாலச்சந்திரன்
கை, கால்களினை கட்டி அரும்பெரும் சாதனை ஒன்றினை தொண்டைமானாறு வீரமண் பெற்றெடுத்த மறக்குடி மறவன் பாலச்சந்திரன் அவர்கள் 21.07.1963 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆழமான 1500 அடி அகலமுள்ள ஊர்காவற்துறை துறைமுகத்திற்கும் காரைநகர் துறைமுகத்திற்கும் இடையிலுள்ள கடல் நீரோட்டத்தை குறுக்கறுத்து நீந்திக்கடந்து அரும்பெரும் சாதனை ஒன்றைப்படைத்துள்ளார். 
 
இவை மட்டுமன்றி இவரது சாதனை நடைபெற்ற, அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இச்சாதனை வீரனின் வயது 16 என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி பாக்குநீரினை வீரர்களுக்கு ஒரு சவாலாக இச்சாதனையை நிகழ்த்தினார். இவை தவிர இவர் தருணம் தப்பினால் மரணம் என்று அறிந்தும் மரணதேவதையின் மடியில் விளையாட பாக்கு நீரினை வீரர்களிற்கு சவால் ஒன்றை விடுத்திருந்தது. இவரது வயதில் இவர் காட்டிய துணிச்சல் என்றே கூறவேண்டும்.
 
இவ்வாறான சாதனை புரிந்த மறவன், பாக்கு நீரினையை நீந்திக்கடந்த நவரத்தினசாமி அவர்களுக்கும் தாய் லீலாவதிக்கும் கிடைத்த மகன்தான் பாலச்சந்திரன் அவர்கள் இவர் சிறுவயதிலிருந்தே முத்தமிழ் நாட்டமுள்ளவராகவும் விளங்கி வந்தார்.
 
வரலாறு படைத்த மாமனிதன் நவரத்தினசாமி அவர்களுக்கு உயர்ஸ்தானிகர் தேசாய், தேசாதிபதி மாளிகை வாழ்த்துக்கள் வழங்கியது. முருகுப்பிள்ளை முகிழ்ந்த முத்தான புதல்வனுக்கு வெற்றிச் சின்னம் மகாராணியால் அளித்துக் கௌரவிக்கப்பட்டது. புகழ் இலங்கை மண்ணில் அடங்கிவிடவில்லை. பாரெல்லாம் பரவி வல்வைநகரை வல்வெற்றித்துறையாக்கி இலங்கை மாதாவிற்கு முடி சூட்டியது. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ நவரத்தினசாமியால் பெரும் புகழ் பெற்றது.
 
இந்த உயரிய சாதனையை சாதனை வீரனை நினைக்கும் போது நமது நெஞ்சங்கள் நிமிருகின்றன. மகிழ்வால் விம்முகின்றன. அந்த மண்ணில் வீரம் விழைவிக்க எண்ணிய தமிழர்கள் தலைவன் தோன்றினானென்றால் இன்னும் இரட்டிப்பு மகிழ்வே.
 
நிறைவாக எங்கள் ஆழிக்குமரனக்கு இட்ட மலர்மாலைகளோடு கொடுத்த விருதுகளோடு வாடாத மாலை ஒன்றைச் சூட்டி நிறைவு செய்யலாம்.
வெற்றி ஈட்டிவிட்டான் - தமிழன்
விருது நாட்டிவிட்டான் - உலகு
முற்றும் கேட்டிராத – புகழின்
முடியிலேறிவிட்டான் - அன்பாய்ப்
பெற்ற தாயின் புகழை – எங்கும்
பேச வைத்துவிட்டான் - ஈழம்
நற்றவத்தினாலெ - ஈன்ற 
நவரத்தினசாமி.
 
வீரன் நவரத்தினசாமியின் பாடசாலைப்பருவத்திலே ஆங்கிலேயன் ஒருவன் 22மைல்கள் நீளமுள்ள ஆங்கிலக்கால்வாயை நீந்திக்கடந்து சாதனை படைத்ததை ஆசிரியர் ஒருவர் பெருமையுடன் கூறினார். அதுவே இவரது சாதனை எனும் பெரும் தீச்சுவாலைக்கு வைத்த சிறு நெருப்பாக மாறியது. தானும், தனதருகில் உள்ள பாக்கு நீரினையை நீந்திக்கடந்து சாதனை புரியவேண்டும் எனும் உளத்தீயை மூட்டியது.
 
மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை என்பவற்றை தமிழ் மக்கள் எண்ணிப்பார்க்காத காலமது. அரசதிணைக்களங்கள் கூட சுகந்திரமாக ஜாதி பேதமின்றி செயற்பட்டன. இதனால் அன்றைய கல்வித்திணைக்களம் எமது சிறார்கள் எதிர்காலத்தில் நீச்சல் வீரன் நவரத்தினசாமி போல பல சாதனைகளைப் புரியவேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் மாணவர்களுக்கு உரிய தமிழ்மொழி பாடவிதானத்திலே (உமாவாசகம்) எனும் பாடப்புத்தகத்தில் இவரது சாதனையை 25ம் பாடத்தில் ;கடல் கடந்த தமிழன்' எனும் தலைப்பில் பாடநூலாக்கியது. வாசகர்களின் கவனத்திற்கு அதனை அப்படியே இங்கு கீழே தருகிறேன்.
 
உமாவாசகம் - பாடம் 25
(பக்கங்கள் - 77,78,79,80)
கடல் கடந்த தமிழன்
 
உலகத்தில் பல அரிய கருமங்களை நிறைவேற்றி தமக்கும், தாம் பிறந்த நாட்டிற்கும் புகழைத்தேடிக்கொடுத்த பெரியார்களுள் நவரத்தினசாமியும் ஒருவர். இவர் இருபதாம் நூற்றாண்டில் தமது நீச்சல் வல்லமையினால் பெரும் கடலைக்கடந்து புகழீட்டினார். 
 
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டைமானாறு என்னும் ஊரில் 1909ம் ஆண்டில் பிறந்தார். இவர் இளமைப்பருவத்தில மிகவும் புத்திசாலியாகவும், மனத்தைரியம் உடையவராகவும் விளங்கினார். தமிழ், ஆங்கிலம் என்னும் இரு மொழிகளிலும் வல்லவராய் இருந்தார். 
 
இவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் இவருடைய ஆசிரியர் இருபத்திரண்டு மைல்கள் நீளமுள்ள ஆங்கிலக் கால்வாயை ஒரு வெள்ளைக்காரன் நீந்திக்கடந்த சம்பவத்தை கூறினார். இதனை மிகவும் கூர்மையாக கவணித்துக்கொண்டிருந்த நவரத்தினசாமி தாமும் அதனைப்போலவே தமக்குப் பக்கத்தில் உள்ளதும் முப்பத்தொன்றரை மைல்கள் தூரமானதுமான பாக்கு நீரினையை நீந்திக்கடந்து விட வேண்டும் என்று எண்ணினார். தமது எண்ணம் நிறைவேறுவதற்கு அனுகூலமாக இவர் தருணம் வாய்க்கும் பொழுதெல்லாம் நீந்திப்பழக ஆரம்பித்தார்.
 
 
மேன்மை தங்கிய பிரிட்டிஸ் மகாராணியாரின் முடிசூட்டுவிழாவை (02.06.1953) முன்னிட்டு அதன் ஞாபகார்த்தமாக சாதனையாளன் நவரத்தினசாமிக்கு பிரித்தானிய அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட பதக்கத்துடன் கிடைத்த இராஜகடிதம்.
 
அரசினர், தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றும் அவர், இளமையில் தாம் எண்ணிய கருமத்தை நிறைவேற்ற மறந்தாரல்லர். பாக்குநீரினையை நீந்திக் கடந்து விட உறுதி கொண்டார். அவ்வாறே 1954ஆண்டு பங்குனி மாதம் 16ம் திகதி வல்வெட்டித்துறை துறைமுகக்கடலில் குதித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் ஆசி கூறி வழியனுப்பினர். அலையெறியும் கடலில் இருபத்து மூன்றரை மணித்தியாலங்களாக ஓய்வின்றி நீந்தினார். புயல் காற்றும், பெருமழையும் அவரின் முயற்சிக்கு இடையூறாய் இருந்தன. அவரால் இயற்கையோடு எதிரிட்டு அப்பால் நீந்தமுடியவில்லை நண்பர்களின் வேண்டுகோள்படி அவரின் முதல் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் நவரத்தினசாமி மனமுடைந்தாராயினும், தமது தைரியத்தினை இழந்து விடவில்லை. எப்படியாவது பாக்கு நீரினையை நீந்திக்கடந்து விடுவதென்று தீர்மானித்தார்.
 
தமது எண்ணத்தை நிலைநிறுத்த விரும்பிய இவர் அதே மாதம் 25ம் திகதி மாலை மீண்டும் நீந்தப்புறப்பட்டாhர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார்கள். இம்முறை இயற்கையின் பல தடைகளையும் வென்று சிறிதும் இழைப்பாறாது அலைகடலைத்தாண்டி அடுத்த நாள் மாலை 7மணிக்கு இந்தியாவில் உள்ள கோடிக்கரையில் காலூன்றினார்.
 
கோடிக்கரையில் தாய் நாட்டு மக்கள் பெரும் ஆராவாரத்துடன் கடல் கடந்து தமிழனை வரவேற்றார்கள். உலகத்தில் ஒப்பற்ற சாதனையைப்புரிந்த ஆனந்தத்தால் ஆரவாரித்து வாழ்த்தினர். இலங்கை, இந்தியப்பிரதம மந்திரிகள் ஆசி கூறிப்பாராட்டுரை பகர்ந்தனர். ஊர்கள் தோறும் வீரன் நவரத்தினசாமிக்கு உட்சாகமான வரவேற்ப்புக்கள் அளிக்கப்பட்டன. எலிசபேத் மகாராணி இலங்கைக்கு வந்தபோது இவ் வீரர் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
 
மூன்று குமாரர்களுக்குத் தந்தையும், நாற்பத்துநாலு வயதுடையவருமான நவரத்தினசாமி நீச்சல் வீரர் மாத்திரமன்றி கணிதம், சங்கீதம், நடிப்பு, சித்திரம், காற்பந்தாட்டம் ஆகியவற்றிலும் கமத்தொழில் நவீனமுறைகளைக் கண்டறிதலிலும் விசேட திறமை உடையவர். இவர் வாழ்நாளில் பல அரிய கருமங்களைச் சாதித்து நாட்டிற்கு புகழீட்டித்தர இறைவன் அருள்புரியவேண்டும்.
 
1954 ஏப்ரல் 6ம் திகதியிடப்பட்டு இலங்கைக்கான இந்தியத்தூதவர் திரு ஊ.ஊ. தேசாய் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ். இச் சாதனை இமய மலைச் சாதனையுடன் ஒப்பிடப்பட்டதுடன் இலங்கைக்கு மட்டுமல்லாது முழு ஆசியாவுக்குமே பெருமை தேடித்தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த சாதனை மூலம் இலங்கை மாதாவுக்கு இங்கு வாழும் சகல இனத்தவருக்கும் பெருமை தேடித்தந்து உலகிற்கு எமது ஒற்றுமையை பறைசாற்றி நான்கு வருடங்களின் பின் அதாவது 1958ல் 'சிங்களம'; மட்டும் என்ற கொள்கையை ஸ்ரீலங்கா அரசு முன்னவைத்த ஆண்டிலிருந்தே இலங்கையில் இனப்பிரச்சினை தோன்றியது. அது இன்றுவரை தொடர்ந்தும் வருகிறது. இதனாலோ என்னவோ பல உலக சாதனைகளைப் புரிந்து 7க்கு மேற்பட்ட சாதனைகளை கிண்ணஸ் புத்தகத்தில் பதிய வைத்தவரும் சிங்களப்பெண்மணியை மணந்தவருமான வல்வெட்டித்துறையின் மகிந்தன் ஆளிக்குமரன் ஆணந்தனின் வீரதீரச் செயல்களையும் கூட இலங்கை அரசாங்கம் கௌரவிக்கத்தவறிவிட்டது.
 
நடராசா சிவரத்தினம் (வல்வை ஜெயம்)
ஓய்வு நிலை உதவிப்பொது முகாமையாளா
இலங்கை வங்கி.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
தியாகங்களின் பெறுமதி?
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வைக்கு கடற் தொழில் அமைச்சர் விஜயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் மக்களின் பார்வைக்கு.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கரைக்குள் அடித்து வரப்பட்ட படகு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
மீன் படகுகள் சேதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)
கடும் மழைக்கு மத்தியில் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் (படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2024 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2016>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
91011
1213141516
17
18
19
20
21222324
25
2627282930  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai