வல்வை ஊரணி வைத்தியசாலையின் இலவச 'Scan' சேவைகள் இடை நிறுத்தப்படக்கூடிய நிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்தி சபைக்கு 25 லட்சரூபாயில் இருந்து அதிநவீன Scanner வாங்கப்பட்டு தற்போது ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் Scan சேவைகள் வைத்திய நிபுணர் Dr . சங்கரதாஸ் நிமலன் அவர்களினால் சிறந்த முறையில் சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் கர்ப்பிணிப்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வாரவாரம் 25 நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். இது போல Clinical Laboratory Service உம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது தவிர மக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இது வரையில் 4000 இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன . ஆனால் நிதி வசதியின்மையால் கடந்த மூன்று வருடங்களாக இலவச கண்ணாடி வழங்கல் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் வல்வை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி Dr .k .மயிலேறும் பெருமாள் அவர்களின் தனிப்பட்ட முயற்சியினாலேயே நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றது.
Scan பண்ணும் Doctor ஊதியம், போக்குவரத்து Clinical Laboratory Service Chemical செலவு போன்றவற்றிற்கு மாதம் 40 - 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. பொது மக்களினால் அன்பளிப்பு செய்யப்படும் பணத்தின் மூலம்தான் இச்சேவை நடத்தப்படுகிறது. தற்போது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபையிடம் போதிய நிதி இல்லாததன் காரணமாக இச் சேவைகள் நிறுத்தப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது
எனவே இச் சேவைகள் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற பொது மக்கள், நலம் விரும்பிகள், வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளின் உதவிககள் எதிர்பார்க்கப்படுகின்றது. வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை தொடர்புகளுக்கு வைத்தியசாலை தொலைபேசி இலக்கம் 021-2263530
மேற்குறிப்பிடப்பட்டுள்ள Scanner கனடா வாழ் வல்வை மக்களிடம் இருந்து சேகிரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.