கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் செயற்பாட்டிற்கான அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2013 (திங்கட்கிழமை)
கலை கலாச்சார இலக்கிய மன்றம் வல்வெட்டித்துறை
அன்புமிக்க எம் வல்வை மக்களுக்கு!
சாதனைகளையும், சரித்திரங்களையும் சர்வ சாதாரணமாகப் படைத்த வல்வையில் கலைக்கும், கலைஞர்களுக்கும் எப்பொழுதும் குறைவிருந்ததில்லை.
வீரத்திலும், விளையாட்டிலும் விண்ணைத்தொட்டது நமது வல்வை. பண்பிலும், பாரம்பரியத்திலும் பாரினையே வியக்க வைத்த பெருமையும் நமக்குண்டு.
எம் கலைஞர்களின் பல நாடகங்களும் ,காத்தவராயன் கூத்துக்களும் காவியங்களாக மாறி சாதனைகள் படைத்த பெருமையும் எமது ஊரில் தான். எதற்கும் குறைவில்லாத எமது ஊரில், கடந்த மூன்று வருடங்களாக தை மாதத்து முதல்நாளில் எமது மன்றம் கலைப்பெருவிழா நடாத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்தப் பெருவிழாவில்,
* வல்வையின் முன்னைய நாள் கலைஞர்களையும்,அறிவுஜீவிகளையும் கௌரவிப்பதோடு மட்டுமில்லாது, தற்போதைய கலைஞர்களை ஊக்குவிப்பது,மற்றும் புதிய கலைஞர்களை உருவாக்குவது போன்ற சேவைகள் எம்மால் முன்னெடுக்கப்படுகின்றன.
* இது தவிர எமது முயற்சியில் எம்மவரை ஊக்குவிக்கும் முகமாக "நெய்தல்"என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வருகின்றோம். (இதுவரை மூன்று சஞ்சிகைகள் வெளியிட்டுள்ளோம்).
* வல்வை நகர சபையின் ஆதரவோடு மாணவர்களுக்கான சிறுகதை பயிர்ச்சிப்பட்டறையும் எம்மால் நடாத்தப்பட்டது.
* கடந்த வருடம் எமது மன்றத்து இளைஞர்களால் , ஊறணி வைத்தியசாலையில் இரத்ததானம் செய்யப்பட்டதை மிகவும் பணிவோடு உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.
* எம் கலைஞர்களது ஆர்வத்தின் காரணமாக , முதல் முறையாக "மனம்"என்ற பெயரில் குறும்படம் ஒன்றும் தயாரானது. போதிய நிதியும்,தேவையான வசதியும் இல்லாமையால் எம்மால் மேற்கொண்டு வளர முடியவில்லை. எமக்கான சரியான "களம்" ஒன்று உருவாக்கப்பட்டால் கலைப்படைப்புக்கள் நிறைய உருவாகும்.
* இப்போது எமது ஊரில், இசையிலும்,ஓவியத்திலும் ஆர்வமுள்ள பிள்ளைகளுக்கென்று பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பித்துள்ளோம். கணிசமான பிள்ளைகள் ஆர்வத்தோடு வந்து சேர்ந்துள்ளார்கள். சனி ஞாயிறு தினங்களில் நடைபெற்றஇந்த வகுப்புக்கள், பிள்ளைகளின் தேவைகருதி, தற்போது வெள்ளிக்கிழமையையும் சேர்த்து வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. சங்கீதம், பாட்டு, நடனம், ஓவியம், கட்டுரை, கவிதை, சிறுகதை என ஒவ்வொரு துறையிலும் கலைஞர்கள் உருவாக்கப்படவேண்டும்
என்பதில் நாம் விரும்பிச் செயற்படுகிறோம்.
* நல்ல தரமான கலைஞர்கள் உருவாக்கப்பட்டு,தமிழ் நாட்டு கலைஞர்களது தரத்தில் வல்வையும் கலைத்துறையில் சாதனை படைக்கவேண்டும் என்பதுதான் எமது கனவு.
எம்மோடு கைகோர்த்து நிற்கும் வல்வையின் மூத்த கலைஞர்களே! நீங்கள் எமக்கு செய்துவரும் உதவிகளுக்கு மிக்க நன்றி.
உங்களின் இந்த உதவிகளை எமக்கு தொடர்ந்து செய்யுங்கள் என அன்போடும் உரிமையோடும் கேட்கிறோம்.
இசை,ஓவிய பயிற்சி வகுப்புக்களை தனது வீட்டில் நாடத்துவதற்கு இடம் கொடுத்ததோடு மட்டுமில்லாது எமக்கு நல்ல ஆலோசகராகவும் இருந்து உதவிகள் பல செய்யும், கலாநிதி திரு. ராஜேந்திரன் அவர்களை நாம் என்றும் மறக்க முடியாது. இசைப் பயிற்சி வகுப்புக்களுக்கான ஆசிரியரின் ஊதியத்தை தந்துதவும்
திரு.தி .முரளிதரன் அவர்களுக்கும் எமது நன்றி. எமது இசை வகுப்புக்களுக்கு முதற்கட்டமாக இரண்டு "கீ-போர்ட்" வாங்கிக்கொடுத்ததோடு மட்டுமில்லாது தேவையான இசைக்கருவிகள் முழுவதையும் கட்டம் கட்டமாக வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ள, லண்டன் PM.FOUNDATION (பி. எம் பவுண்டேசன்)
நண்பர்களுக்கும் எமது நன்றிகள்.
உங்களின் இந்த ஆதரவில் "வல்வை மெல்லிசைக்குழு"ஒன்று உருவாகிவிடும். எமது இந்தக் கலைச்சேவை மேலும் வளரவேண்டும் என விரும்பி, வல்வையில் உள்ள எங்கள் வல்வை ஒன்றியம், எம்மைப்பற்றி புலம் பெயர் வல்வை நலன்புரிச்சங்கங்களுக்கு அறிவித்து, நிதி உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.