நேற்றைய முன்தினம் முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் "மகாசென்" நிலைகொண்டிருந்த தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது பங்களாதேஷ் மற்றும் மியன்மாரை அண்டிய கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாழமுக்கத்தினால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டிருந்தாலும், நேரடியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் இலங்கையின் வடபகுதியில் நேற்று பலத்த மழை ஏற்பட்டிருந்தது. இந்தப் புயலினால் தற்பொழுது இந்தியாவின் கிழக்குக் கரையோரங்களில் பலத்த மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வங்காள விரிகுடாவில் தாழமுக்கமானது (Tropical cyclone) மே மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிக்கின்றது.
போன வருடம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலாம் தாழமுக்கத்தினால், இலங்கையின் வட பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்ப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஒரு புதிய தாழமுக்கமானது, ஆரபியக் கடலின் நடுப்பாகத்திற்கு சற்று கிழக்காக இன்னும் 10 - 12 நாட்களில் உருவாக வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படும் புயல் அவதான நிலையம் ஒன்று
தெரிவித்துள்ளது.
கீழே உள்ள படங்களில் தாழமுக்கம் ‘மகாசென்’ யின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.