வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுப் பூங்கா அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2013 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதாக நகரசபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறை முருகையன் கோவிலுக்கு பக்கமாக, கள்ளுத் தவறணைக்கு முன்பாக, தீருவில் குளம் உட்பட்ட சுமார் 62 பரப்பிலான பரந்த வெளிப் பிரதேசத்தில் அமையவுள்ள இப் பூங்காவிற்கு 'வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா' எனப் பெயரிடப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள 62 பரப்பில், வல்வெட்டித்துறை சிவன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 20 பரப்புக்களை நீண்டகால குத்தகை அடிப்படையிலும், ஏனைய 42
பரப்புக்களை காணியின் சொந்தக்காரர்களிடமிருந்து சுவீகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமையவுள்ள இப்பூங்கா, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் 400m தூரத்தில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.