உலகமெங்கும் பரந்து வாழும் வல்வெட்டித்துறை மக்களுக்கு ஒரு உறவு பாலமாக அவர்களை ஒன்றிணைக்கும் தளமாக இயங்கும் Valvettithurai.org இணையதளம் தனது பத்தாவது அகவையை நிறைவு செய்யும் நன்னாளில் அதனை மனதார உளமார வாழ்த்துவதில் பெருமகிழ்வுகொள்கின்றேன்.
ஊரைபிரிந்து உறவுகளை பிரிந்து பிறந்தமண்ணின் நினைவுகளுடன் பெரும் வலிகளுடன் வாழும் எமக்கு ஊரின் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், கோவில் திருவிழாக்களின் நிழல் படங்களை பார்து பெருமகிழ்வு கொள்வதற்கும், தமிழில் தட்டச்சு செய்வது எப்படி போன்ற பதிவுகளை தெளிவாக விளக்கமாக பதிவிட்டு எம்மைபோன்றவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது மட்டுமல்லாது ஆக்கபூர்வமான கட்டுரைகள் வரலாற்று தொடர்பதிவுகள் என ஆக்கபூர்வமான பயனுள்ள பதிவுகளை தன்னகத்தே தாங்கி வரும் Valvettithurai.org மென்மேலும் சிறப்புடன் வளர ஒளிர வாழ்த்துகள் வாழ்த்துகள் .
வல்வெட்டித்துறை மக்கள் உலகெங்கும் பரந்து பெரும் அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்கள் நிறைந்து இருகின்ற போதும், சிலரின் தற்பெருமைக்ககவும் பிற்போக்கான சிந்தனையாலும் செயல்பாட்டாலும் எமக்குள்ளே நாம் பிரிந்து செயலற்றவர்களாக மெலிந்து வருகின்றோம்
இதனால் அனுபவமும் அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்கள் 'எமகென்ன' என்று ஒதிங்கி போயிருகின்றார்கள் இது வல்வை மண்ணுக்கோ மக்களுக்கோ எதிர்கால தலைமுறையினருக்கோ நல்லதல்ல நாம் சிறந்த வழிகாட்டிகளாக மற்ற ஊர்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும் . வாய்ப்புகளுக்கும் வசதிகளுக்கும் தமையே நம்பி இருக்கக் கூடிய தலைமுறையை வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் விட்டுசெல்லவேண்டும்
வல்வெட்டித்துறை மக்கள் அனைவரையும் ஒன்றிணைகின்ற செயல்பாட்டை பதிவுகளை Valvettithurai.ORG ஊடாக காண்கின்றேன் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.