10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - கல்விச் செயற்பாட்டுக்கும் ஆவண செய்யவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2021 (வியாழக்கிழமை)
இன்றைய காலத்தில் செய்திகள் யாவும் பெரும்பாலும் இணையதளங்கள் ஊடாகவே மக்களைப் போய் சேருகின்றன, ஏராளமான இணையதளங்கள் செயயற்படுகின்ற போதிலும் வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் ஒரே ஒரு இணையதளம் வல்வெட்டித்துறை.Org என்று சொன்னால் அது மிகையாகாது. உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரே இணையதளமாக இது அமைந்துள்ளது.
ஊர் செய்திகள், காலநிலை, உலகச் செய்திகள் துயர் பகிர்வுகள், வாழ்த்துச் செய்திகள், வரலாற்று நிகழ்வுகள், சாதனையாளர்கள் பற்றிய விபரங்கள், கோவில் நிகழ்வுகள் படங்கள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கி நடைபோடுகின்றது.
கல்விச் செயற்பாடுகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் படங்கள், விபரங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களை ஊக்கிவிற்பதோடு, அனைவரும் அறியும் வண்ணம் செய்வதனால் அம் மாணவர்கள் சிலருக்கு மேலும் படிப்பினைத் தொடர்வதற்கு உதவிகள் கிட்டுவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளீர்கள். அதற்காக நிச்ச்யம் உங்களையும், உங்கள் நிர்வாக உறுப்பினர்களையும் பாராட்டியே தீர வேண்டும்.
காராத்தே யோகானசம் போன்ற கலைகளில் வெற்றி பெற்ற எங்களை உலகெங்க்க்கும் அறியும் வண்ணம் செய்திகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டதன் மூலம் எமக்கு பெருமை தேடித் தந்தமைக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இதன் மூலம் இன்னும் பலர் இக்கலையைப் பயில ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய கால கட்டத்தில் (கொரொனா) மாணவர்களின் கல்விச் செயற்பாடு பின்தங்கியுள்ளது. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கான அறிவுறுத்தல்கள், செயற்பாடுகள் பற்றி அறியத்தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பத்தாண்டுகள் அல்ல இன்னும் பல ஆண்டுகள் சேவை தொடர Valvettithurai.Org நிர்வாக உறுப்பினர் அனைவரையும் மனதார வாழ்த்துகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.சிவநேசன் (Srilanka)
Posted Date: October 14, 2021 at 09:56
திருமதி மாலதி முரளியின் கட்டுரை மிகவும் பயனேள்ளதாக உள்ளது. மாலினி கராத்தே , யோகா போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கம் கள் வென்று. வல்வைக்குப் பெருமை சேர்த்த வர்.எவ்வளவு முயற்சிகள் செய்தும் தற்கால இளைஞர்களும் யுவதி கூறும் ஒருவிதமான முயற்சி கூறும் , இந்த கலைகளை கற்க முன்வராதது மிகவும் வேதனையளிக்கின்றது
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.