பத்தாவது அகவையைப் பூர்த்தி செய்யும் Valvettithurai.ORG தன் பணியைச் சிறப்புற ஆற்றி நூறு ஆண்டுகள் வாழ்க
தொண்ணூறுகளில் ஏற்பட்ட புலம்பெயர்வு, வல்வையர்களை மட்டும் விட்டு வைக்கவில்லை. வல்வையர் புலம்பெயர்ந்தாலும், தமது ஊரின் நினைவுகளைப் புறம்தள்ளாமலும் மனதில் ஏக்கமுடன் வாழ்ந்த காலங்களில் ஊரைப் பற்றி முற்றிலும் அறியமுடியாமல் பரிதவித்த நிலையில் அவர்களின் ஏக்கங்களுக்கு வடிகாலாக வல்வைச்செய்திகளுடன் தன்னை அறிமுகப்படுத்தி புலம்பெயர் வல்வையரின் ஏக்கங்களைத் தீர்க்கும் பணியில் Valvettithurai.org பணி அளப்பரியது.
வல்வைச் செய்திகளை மட்டும் தாங்கிப் புறப்பட்ட இத்தளம் தன் பயணப் பாதையில் பிற ஊர்களையும் உள்ளடக்கி, தனது பரிணாம வளர்ச்சியில் கட்டுரைகள், கவிதைகள், அப்பா அண்ணாவின் அந்தக்கால நினைவுகள், சிந்தனையாளர்கள், சாதனையாளர்களின் நினைவுகளை உள்ளடக்கியும் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
புலம்பெயர் வல்வையர் பலரின் விடியற்காலம் Valvettithurai.ORG இன் தளத்தில் விடிவது கண்கூடு.
இவ்வாறு பல பணிகளை ஆற்றி தனது பத்தாவது அகவையைப் பூர்த்தி செய்யும் இத்தளம் மென்மேலும் பற்பல ஆண்டுகள் தன் சேவையைத் தொடர்ந்து ஆற்றி, தன் புகழை மென்மேலும் உயர்த்த எமது வாழ்த்துக்கள்!
இத்தளத்தின் பரிணாமத்தில் புதிய பணி ஒன்றையும் அறிமுகம் செய்தால் இத்தளத்தின் புகழ் மென்மேலும் சிறக்கும் என்பது பலரின் எண்ணமாகும். அகவை பூர்த்தியாகும் தினத்தில் வல்வை வரலாறு உட்பட அறிஞர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய பற்றாளர்கள் போன்றோரின் நினைவுகளைத் தங்கும் கட்டுரைகள், கவிதைகள், புனை கதைகள், துணுக்குகள் போன்ற அம்சங்களுடன் ஆண்டு மலராகப் பரிணமிக்க வேண்டும் என்பதும் அவர்களின் அவாவாகும். பதினோராம் அகவைக்கான மலரின் பயணத்தை இப்பொழுதிலிருந்தே தொடங்கலாம்.
எவ்வித தன்னலமின்றி, சேவையையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இத்தளத்தை உருவாக்கியோர், ஊன்று கொடுத்தோர், உடன் இருந்து உதவி செய்தோர், ஊக்கம் கொடுத்து வளர்த்தோர் அனைவருக்கும் நன்றிகூறி மீண்டும் ஒரு முறை இத்தளம் நூறாண்டுகாலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.