பத்தாவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - வலைத்தளத்தினூடாக இணைத்து நிற்கும் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/10/2021 (திங்கட்கிழமை)
உலகப் பந்தில் பரந்து வாழும் எம் வல்வெட்டித்துறை உறவுகளை வலைத்தளத்தினூடாக இணைத்து நிற்கும் Vallvettithurai.org தனது பத்தாவது அகவையை பூர்தி செய்யும் இத்தருணத்தில் அதனை வாழ்த்தி பெருமையடைகிறேன். அதன் சேவை எம்மக்களுக்கு பல்லாண்டுகாலம் தொடர வல்வை முத்துமாரி அம்மன் அருள்புரிவாராக.
இவ்விணையத்தளம் ஆரம்பத்தில் வல்வெட்டித்துறைசார் நிகழ்வுகளின் புகைப்படங்கள், எம்மவரின் துயர் பகிர்வுத் தகவல்கள் மற்றும் எம்மூர் தொடர்பான செய்திகள் என மட்டுப்படுத்த தரவேற்றங்களையே கொண்டிருந்தது. தொடர்ந்து எம்மவர்களின் பங்களிப்புகளினாலும் நிர்வாகிகளின் கடின உழைப்பினாலும் தற்போது பல்வேறுபட்ட கட்டுரைகள், பரந்துபட்ட தாயக செய்திகள் , பக்கச்சார்பற்ற அரசியல் ஆய்வுகள் என வளர்ந்து நிற்கிறது.
ஆதவன் பக்கங்கள் சமகால நிகழ்வுகளை நன்கு அலசி நிற்கின்றன. மற்றும் அவை மறக்கமுடியாத எம்மவர்களின் சாதனைகளை வருங்கால சந்தநியும் அறியும்படி ஆவணப்படுத்தி நிற்கின்றன. சுழியோடி வைரவர் அப்பா மற்றும் பழனியப்பா பற்றிய பக்கங்கள் அதற்கு நல்ல உதாரணங்கள்.
பெரும் யுத்தம் எம்மை கைதவற விட்ட பேணியிலிருந்த கயங்குண்டுகள் ( கோலிக்குண்டுகள்- marbles) போல உலகம் முழுவதும் பரப்பிவிட்டது. ஊரைவிட்டு நான் வெளிக்கிட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்னைப் போன்ற பலர் இப்பொழுதும் ஊரில் வாழ்வதாகவே உணர்கின்றோம். அதற்கு Valvettithurai.org தளமும் மற்றைய எம்மூர் சார்ந்த தளங்களும் பெரும்பங்காற்றி வருகின்றன.
இத்தளம் இன்னும் சில பங்களிப்பாளர்களை உள்வாங்கி தனது சேவைகளை இதர தமிழ்மக்களுக்கும் வழங்கி உலகத் தமிழர்களை இணைத்து நிற்கும் இன்னமொரு தளமாக உயர்ச்சியடையலாம். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தருணம் இதுவென நினைக்கின்றேன்.
Valvettithurai.org தளம் தொடர்ந்தும் தனது விரிவடைந்த சேவைகளை உலக வல்வைருக்கும் இதர தமிழர்களுக்கும் வளங்கிநிற்க அதனை வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.