‘என்யினியர் ஒப் தி பில்டிங்’ (Engineer of the Building), ‘டொக்டர் ஒப் தி ஹொஸ்பிற்றல்’ (Doctor of the Hospital), ‘மனேஜர் ஒப் தி பேம்’ (Manager of the Firm), ‘சீப் மினிஸ்டர் ஒப் தி ஸ்டேட்’ (Chief minister of the State), ‘பிரின்சிபல் ஒப் தி ஸ்கூல்’ (Principal of the School), ‘ஓனர் ஒப் தி ஷாப்’ (Owner of the Shop)………. என்றெல்லாம் படங்களிலோ அல்லது பேச்சுக்களிலோ குறிப்பிடப்படாமல் ‘கப்டன் ஒப் தி ஷிப்’ (Captain of the Ship) என்றே ஒரு 'தலைமைத்துவதுக்கான உதாரணத்துக்கு' சகலரும் குறிப்பிடுகின்றார்கள். ஏன்?
பைலட் ஒப் தி ப்ளேன் (Pilot of the Plane) என்று கூடக் குறிப்பிடப்படுவதில்லை.
விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தகவல் தொழில் நுட்பவியலாளர்கள், வைத்திய நிபுணர்கள், மூன்று இலக்க மாடிக்கட்டடத்தைக் கட்டும் பொறியிலாளர்கள் என இவ்வரிசை விற்பனர்கள் தரம் பலமடங்கு உயர்ந்துள்ள போதும் ‘Captain of the Ship’ என்ற பதம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஏன்?
கடலோடியாக இருந்த எனது பேரனார் ஆறுமுகம்
பண்டையகாலக் கப்பல்களை எடுத்துக்கொண்டால் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை, உணவைச் சேமிக்க குளிர்சாதன வசதிகள் இல்லை, நீண்ட நாள் கடற்பயணங்களில் உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை. கடல்நீர் குளிப்பு, நோய்க்குள்ளாகும் ஒருவருக்கு வைத்தியரோ வைத்திய வசதிகளோ அற்ற கை வைத்திய சிகிச்சை, இதர அத்தியாவசிய தேவைகள் அற்றநிலை, சூறாவளி பற்றி அறியக் கூடிய வசதிகள் அற்ற நிலை, கடுமையான கடல்களினூடான பயணங்கள், குடும்ப சுகதுக்கங்களைக்கூட அறியமுடியாத நிலை....போன்ற மிக நீண்ட பிரதிகூலமான விடயங்களுடன் பயணிக்கும் கப்பலையும் அதன் மாலுமிகளையும் பாதுகாப்பாக கொண்டுசென்றார்கள் அந்தக்கால கப்டன்மார்கள்.
‘Captain of the ship’ என்ற பெருமையைப் பெற்றார்கள்.
மூன்றாம் நூற்றாண்டில் மகா அலெக்சாண்டரில் தொடக்கி, பதின்நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா போன்றோர்களைத் தொடர்ந்து வெறும் பாய்மரங்களுடன் நட்சத்திரங்களையும், நிலாவையும், கடலையும், காற்றையும் பார்த்து, பாவித்து ஒரு தேசத்தில் இருந்து இன்னொரு தேசத்துக்கு – உலகம் வளர்ச்சி கண்டிராத காலத்தில் பொருட்களையும், மக்களையும் கொண்டுசென்று வந்த அந்தகால கப்பல் தலைவர்களே இந்தப் புகழ் பூத்த சொல்லின் சொந்தக்காரர்கள்.
50 அடி, 100 அடிநீளம் என்று தொடக்கி பின்னர் 50 மீட்டர், 100 மீட்டர் என்று நீண்டு, இன்று 300 மீட்டர், 400 மீட்டர் என்று மிக நீண்டுள்ள ராட்சத கப்பல்களை கடலில் கொண்டுசென்று ‘Captain of the Ship’ என்னும் நாமத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் தற்போதைய கப்பல் தலைவர்கள்.
ஒரு விடயம். கப்பலில் கப்டனுக்கு உண்மையில் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள தகமை (Title அல்லது Rank) ‘மாஸ்டர்’ (Master) என்பதுதான். ஆனாலும் ‘Captain’ என்பதுதான் வழக்கத்தில் நீடிக்கின்றது, தொடந்தும் நீடிக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.