பாலாவின் பிதாமகன் - PM foundation – எமது தலையங்கம் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2013
இயக்குனர் பாலா தனது பிதாமகன் திரைப்படத்தில், படத்தின் முதல் காட்சியையே மயானத்தில் (சுடுகாட்டில்) காட்டியிருந்தார். இப்படம் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. இக்காட்சி மூட நம்பிக்கைக்கு எதிராகக் காட்டப்பட்டிருந்தது. அத்துடன் ஒருவரின் வித்தியாசமான துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மேற்கூறப்பட்ட சம்பவத்தை ஒத்தது போன்றவொரு முயற்சியைத்தான் வல்வையில் சிறுவர் மயானத்தைத் (இடுகாடு) திருத்தி வடிவமைக்க முற்பட்டதன் மூலம் 'PM Foundation' இனர் வெளிப்படுத்தியுள்ளனர்.
யார் இந்த 'PM Foundation'?
'PM Foundation' இனை (P) - பிதா (M) - மகன் Foundation என்று என்ன வேண்டாம். 'PM Foundation' London ஐ தளமாகக கொண்ட செயற்படும் ஒரு தன்னார்வ அமைப்பு. புலம்பெயர்ந்து வாழும் சில வல்வையர்களை உறுப்பினராகக் கொண்டது. சில மாதங்கள் முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'PM Foundation' இன் முயற்சி
'PM Foundation' இனர் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளுக்கு வித்திட்டுள்ளனர். இதுவரை கவனிப்பாரற்றுக் கிடந்த இவ் இடுகாடானது, வல்வை நகாராட்சி மன்றத்தின் அனுமதியுடன், தற்பொழுது சுத்தம் செய்யப்பட்டு, சிறுவர் கல்லறைகள் மெருகூட்டப்பட்டுள்ளன. அத்துடன் சாதாரண பெயருடன் இருந்த இம் மயானத்திற்கு 'வல்வை சிறுவர் துயிலும் பூங்கா' எனவும் பெயரிடப்படவுள்ளது. மேலும் இம்மயானத்தை வெளிநாடுகளில் அமைந்திருக்கும் மயானங்களைப் போன்று மாற்றியமைக்கவும் 'PM Foundation' முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
வரவேற்பு
'PM Foundation' இனரின் இந்த முயற்சிக்கு சில நலன் விரும்பிகள் உடனடியாக முன்வந்துள்ளதுடன், மேலும் பலர், குறிப்பாக புலம் பெயர் நாடுகளில் இருந்து தமது பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
நாமும் வரவேற்போம்
குறிப்பிட்ட கோவில்களுக்கு உதவி, குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு உதவி என்ற நிலையிலிருந்தி சற்று விலகி, 'PM foundation' இன் இந்த வித்தியாசமான முயற்சி ஒரு எதிர்பாராதவொன்றுதான். இது எம் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவொன்றாகும். இவர்களின் இந்த வித்தியாசமான முயற்சி போல், இங்கு வல்வையில் செய்வதற்கு நிறைய விடையங்கள் உள்ளன.
'PM Foundation' இனருக்கு நாம் எல்லோரும் எம்மலான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதன் மூலம் அவர்களின் செயற்பாடுகளை நாம் விரிவாக உதவமுடியும். இது வித்தியாசமான கட்டுமானங்களுக்கு வல்வைக்கு, என்றோவொருநாள் வல்வையை மேலும் சிறந்தவொரு பிரதேசமாக நிச்சயம் உதவும். எம் எல்லோரின் கனவுகளும் நியமாகும்.
Editor Valvettithurai.org
பிற்குறிப்பு எமது வேண்டுகோளுக்கிணங்க 'PM Foundation' யினர், எமக்களித்த அவர்களின் தொடர்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM foundation திரு. குழந்தைவேல் பிரேம் குமார் -- T.P 00-44-7943743878 திரு. சோ . மணிவண்ணன் -- T.P 00-44-7886393116 Email - vvtpmfoundation@hotmail.com