The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.
இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும்.
கிராமியக் காட்சி
Village Scenery
Uploaded Date: 01/11/2014
கிராமியக் காட்சி
கிராமங்கள் தமது அடையாளங்களை சிறிது சிறிதாக இழந்துவருவதாகச் சொல்லப்படுகின்றன. படம் - தமிழ் நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் ஒரு பகுதி ஆகும்.
Village Scenery
Villages are said to be loosing their identities
Photo - A remote part of village in Perambalur district in Tamil Nadu
Baobab tree in Delft Island
நெடுந்தீவின் வரலாற்றுச் சின்னம் - பெருக்கு மரம்
Uploaded Date: 25/10/2014
Baobab tree in Delft Island
One huge Baobab trees (Adansonia digitatal), (‘Peruku Maram’ in Tamil and ‘Ali gas’ in Sinhalese) is found in Neduntievu (Delft Island) and one more is found in Pallimunai, Mannar. These two are the oldest, largest and huge Baobab trees found in Sri Lanka.
This tree, amazingly found on the island of Delft stands isolated in its splendor. A Note attached to this tree indicates that the tree has been brought by seafaring Arab Traders to Sri Lanka, around 700 AD, in order to feed camels. Baobab trees — whose leaves were used to feed these animals. Monkeys love the fruit of this tree and hence this tree sometimes called as the Monkey-bread tree
Baobab trees are the longest-lived species on earth. These trees, also known as ‘Upside-down trees’ are so named because their sparse foliage and meagre crowns give the trees the appearance of bearing roots instead of branches. Baobab trees are tall (up to 30m) and have enormous, swollen trunks, in which they store water during the dry season. Each trunk can store up to 120,000 liters of water.
The oldest and the largest individual Baobab tree in Sri Lanka is found at Pallimunai and is reported to be over 700 years old.
நெடுந்தீவின் வரலாற்றுச் சின்னம் - பெருக்கு மரம்
படத்தில் காணப்படுவது பல நூறு வருடங்களைக் கடந்துள்ள Baobab tree எனப்படும் யாழின் நெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் ஆகும். இதையொத்த 700 வருடங்கள் பழமையான இன்னொமொரு பெருக்கு மரம் மன்னார் பகுதியில் உள்ள பள்ளிமுனையில் அமைந்துள்ளது.
அரேபிய மாலுமிகளால் ஒட்டகங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இது கொண்டு வரப்பட்டிருக்கலாம் என இந்த மரத்தின் மீது உள்ள குறிப்பு தெரிவிக்கின்றது. இந்த மரத்தின் பழங்களை குரங்குகளும் விரும்பி உண்ணுகின்றன.
சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய இந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளும் சுமார் 120,000 லீட்டர் வரையான நீரை வரட்சி காலங்களில் தேக்கி வைக்கக்கூடியவை ஆகும்.
Historical ancient pond
கரும்பாழி புராதன குளம்
Uploaded Date: 18/10/2014
Historical ancient pond
Photo shows a historical ancient pond located at Thondamanaru, Jaffna. The pond has been made by cutting the rocks, where plenty of fresh water is present at a deep of 3, 4 feet.
The locals are using this pond all the way in their life; however the history of the pond is not exactly known now, due to the fact that the note which showed the history had allegedly been taken by some university students for their further studies,
Even though the locals well aware of this pond, but it never drew attention of others, since it is located in a covered area.
Location – Karumpaazhai, about 800m -1000m from Thondamanaru junction, along the Thondamanaru – Vallai road, left side of the road while heading to Vallai, adjacent to Vellankarai cemetery.
We have added more Photos of this pond, including its way and surroundings in our site, section – Photos from us.
கரும்பாழி புராதன குளம்
படத்தில் காணப்படுவது புராதான குளம் ஒன்றாகும். இது தொண்டைமனாற்றுப் பகுதியில் தொண்டைமனாறு - வல்லை வீதியில் கரும்பாழி என்னும் பகுதியில் வெல்லங்கராய் சுடலைக்கு அண்மையில் அமைந்துள்ளது. நீர்மட்டம் மிகவும் உயர்ந்த மிகவும் கற்பாறைகளைக் கொண்டுள்ள பகுதியில் செயற்கையாக மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களால் நெடுங்காலமாக இக்குளம் தற்பொழுதும் பாவிக்கப்பட்டுவருகின்றது. மேலும் இப்பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளிற்கும் இக்குளத்திலுள்ள நீர் பாவிக்கப்பட்டுவருகின்றது.
உள்ளூர் வாசிகளின் தகவல்களின் படி, சுமார் 2 வருடங்கள் முன்பு இக்குளம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள வந்திருந்த சில பல்கலைகழக மாணவர்கள் இப்பகுதியில் இக்குளம் பற்றி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை அகற்ற முற்பட்டதாகவும், உள்ளூர் வாசிகள் இதைத்தடுத்ததாயும், ஆனாலும் சம்பவத்திற்கு மறு நாள் குறித்த கல்வெட்டு மாயாமாகி விட்டதாயும் தெரிவிக்கின்றனர்.
(இக்குளம், இதன் சூழல், குளத்திற்கான பாதை என்பவற்றைக்காட்டும் மேலதிக படங்கள் எமது "Photos from us" என்னும் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
Sea bird in Valvai seas
வல்வை கடலில் கடல் பறவை
Uploaded Date: 26/09/2014
வல்வை கடலில் கடல் பறவை
படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை ஊரிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் இரைக்காகக் காத்து நிற்கும் ஒரு கடல் பறவை. .
புகைப்படக் கலை ஒரு பெரிய அத்தியாயமாக இருந்த போதும், தற்போதைய 2 பொத்தான்களையுடைய நவீன சிறிய டியிற்றல் புகைப்படக் கருவிகள் இது போன்ற புகைப்படப் பிடிப்பை இலக்குவாக்கியுள்ளது என்பது உண்மைதான்.
Sea bird in Valvai seas
The Photo shows a sea bird is waiting to get her fry, in Valvettithurai seas at Orikadu. 2 buttons modern cameras make everyone to get into digital photography easily, even though the photography is a vast subject.
பாம்புப் புற்று
Snake hole
Uploaded Date: 19/09/2014
பாம்புப் புற்று
பாம்புப் புற்று இலங்கை இந்திய நாடுகளில் சமய வழிபாட்டின் ஒரு அங்கமாக விளங்குகின்றது.
படம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் சமய வழிபாட்டுடன் கூடிய பாம்புப் புற்று ஒன்று ஆகும்.
Snake holes are considered as part of religious structure by Hindus in Srilanka and India.
Photo shows a snake hole at Kasi Viswanathar temple in Trichy, Tamil Nadu.
யாழ்ப்பாணப் பாய்மரக் கட்டுமரம்
Sailing wooden boat in Jaffna
Uploaded Date: 12/09/2014
யாழ்ப்பாணப் பாய்மரக் கட்டுமரம்
படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை மயிலியதனை கடற்பரப்பில் காணப்பட்ட சிறிய பாய்மரக் கட்டுமரம் ஆகும். பல பகுதிகளில் பாய்மரங்களின் பாவனை தற்பொழுது இருந்து வருகின்றபோதும், யாழ்பாணத்தில் இதன் பாவனை மிகவும் குறைந்துவருகின்றது.
பாய்மரத்தைப் பாவிப்பதற்கு குறிப்பிடக்கூடிய அறிவு மற்றும் அனுபவம் தேவை. வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த, வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டிருந்த அன்னபூரணி எனப்படும் பாய்மரக்கப்பல் கடந்த 02/08/2013 தனது 75 வருடத்தைக் பூர்த்தி செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Sailing wooden boat in Jaffna
The Photo shows a small wooden sailing boat seen Mayiliyathanai, Valvettithurai. Even though the use of sailing boats exist in many parts of the world, it is declining deeply in Jaffna. Use of sailing requires knowledge and experience.
Florence C Robinson ex Annapoorani, a 120 foot sailing vessel that had made a journey from Valvettithurai to Gloucester of America 75 years ago.
வழுக்கல் மடம்
Vazhukkal Madam
Uploaded Date: 05/09/2014
வழுக்கல் மடம்
படத்தில் காணப்படுவது சுமார் 100 வருடங்கள் பழமையான, வல்வெட்டித்துறை சிவன் கோவிலின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள ஒரு மடம் ஆகும். இந்த மடத்தின் ஒரு பகுதியில் முன்னர் இயற்றமிழ் போதகாசிரியர் வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்களால் தமிழ் மற்றும் சைவம் சம்பந்தமான விடயங்களை வெளியிடும் அச்சகம் ஒன்று நடாத்தப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Vazhukkal Madam
Photo shows a 100 years old building located at western side outer road of Valvettithurai Sivan kovil, presently it is known as ‘’Vazhukkal madam’’. ‘’Madam’’ generally refers to an exterior portion of a Hindu temple, which serves many purposes, including feeding devotees or needy.
In fact the place shown in the Photo refers to an old time prominent Tamil Press, run by Bandit Vaiyithiyalingapillai.
Onion Cultivation
Uploaded Date: 29/08/2014
வெங்காயப் பயிர்ச்செய்கை
படத்தில் காணப்படுவது யாழ்பாணத்தின் பணப்பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் வெங்காயப் பயிர்ச்செய்கை ஆகும். புகையிலைக்கு அடுத்ததாக யாழ்பாணத்தில் அதிக வருவாயை இது ஈட்டித் தருகின்றது.
படம் வல்வையின் புறநிலப் பகுதியில் அமைந்துள்ள கொம்மந்தறைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வெங்காயப் பயிர்ச்செய்கையின் காட்சியாகும்.
Onion Cultivation
Photo shows an Onion cultivation, seen in Kommantharai, Valvettithurai. Onion cultivation witnesses large amount of revenue, next to Tobacco, in Jaffna Peninsula.
Uduppiddy AM College
உடுப்பிட்டி அ.மி.த.க கல்லூரி
Uploaded Date: 21/08/2014
Uduppiddy American Mission College
Photo shows Uduppiddy American Mission College's front view, one of the well known college in Vadamaradchi of Jaffna Peninsula, having students up-to grade 12. The college is located at the heart of Uduppiddy, about 2 Km south of VVT Junction.
உடுப்பிட்டி அ.மி.த.க. பாடசாலை
படத்தில் காட்டப்பட்டுள்ளது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியாகும். தரம் 12 வரை வகுப்புக்களைக் கொண்டுள்ள இந்த பாடசாலை யாழ் வடமராட்சியின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும்.
இப்பாடசாலை உடுப்பிட்டியின் மையப்பகுதியில், வல்வெட்டிதுறைச் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Arm Guard on board
கப்பலில் ஆயுதம் தாங்கிய வீரர்
Uploaded Date: 12/08/2014
Arm Guard on board
Photo shows an Arm guard, sailing on a merchant vessel in order to protect the merchant vessel from being hijacked by Pirates in High risk area off Somalia.
கப்பலில் ஆயுதம் தாங்கிய வீரர்
படத்தில் காணப்படும் காட்சியானது சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து வர்த்தகக் கப்பல் ஒன்றை பாதுகாக்கும் நோக்குடன் கப்பலில் பயணிக்கும் ஆயுதம் தாங்கிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கீழ்பட்ட வீரர் ஒருவர்