The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.
இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும்.
எருக்கலை
Erukkalai
Uploaded Date: 11/01/2014
எருக்கலை
படத்தில் காணப்படுவது எருக்கலை அல்லது எருக்கன் எனப்படும் மூலிகைச் செடியாகும். பூ, பட்டை, இலை, வேர் என அனைத்துப் பாகங்களும் ஆஸ்மா, வாதவலி வீக்கம், பாம்புக் கடி, குதிக்கால் வலி, மலக்கட்டு, வயிற்றுப் பூச்சி, காது நோய், கூட்ட நோய், காக்கை வலிப்பு, பல்வலி போன்ற ஏராளமான நோய்களுக்கு எருக்கலை சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
யாழ்பாணத்தில் மிகப் பெருமளவில் ஒரு வேண்டாத செடியாகவுள்ளது.
Erukkalai
Photo shows a herbal plant (Erukkalai or Erukkan in Tamil) generally seen in the tropical region. Erukkalai is used for curing lot of diseases in Ayurvedic treatment. Erukkalai is very commonly seen in Jaffna Peninsula;
however their usage over here has almost come to a stoppage.
புராதன கிணறு
Ancient well
Uploaded Date: 04/01/2014
புராதன கிணறு
படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிவன் கோயிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள புராதன கிணறாகும். துலா மற்றும் கால்நடைகள் குடிக்க எனத் தொட்டி என அமைந்துள்ள இப்புரதான கிணறு தற்பொழுது பாவனையில் இல்லை.
Ancient well
Photo shows an ancient well located in the outer road of Valvettithurai Sivan Kovil. The well has got a liver type arrangement (called Thulaa in Tamil) to lift the water up easily and a small open tank to feed water to
the cattle. The well is not in use now.
செயற்கை முருங்கைக்காய்
G M Drum stick
Uploaded Date: 28/12/2013
செயற்கை முருங்கைக்காய்
படத்தில் காணப்படுவது செயற்கையாகக் கருவூட்டப்பட்ட முருங்கைக்காய் மரம். இவை மெதுவாக மனிதனுக்கு கெடுதல் இல்லாத முருங்கை மரங்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன. வெறும் 8 அடி உயரமே உடைய இவற்றின் தொழில் நுட்பம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படதாகக் கூறப்படுகின்றது.
குறித்த இப்படம் வல்வெட்டிதுறையின் ஊரிக்காட்டின் நெற்கொழுப் பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது.
G M Drum stick
Photo shows imported Genetically Modified 8 feet high drum stick tree which are slowly replacing conventional drum stick trees in Jaffna Peninsula – getting into bad.
Photo taken in a farm, located at Netkozhu, Orikkadu, Valvettithurai.
குரங்குத்தனம்
An action of a Monkey
Uploaded Date: 21/12/2013
குரங்குத்தனம்
இது வேறு ஒன்றுமில்லை, குரங்குத்தனங்களில் ஒன்று. படம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தின் அழகான கல்லணைப் பகுதியில் எடுக்கப்பட்டது.
An action of a Monkey
It is nothing but a simple shot of an action of the monkey (called as kuranku thanam in Tamil). Photo was taken at Kallanai, in Trichy of Tamil Nadu, India.
சோளம்
Corn
Uploaded Date: 14/12/2013
சோளம்
படத்தில் காணப்படுவது திருகோணமலையின் முதளிக்குளத்தில் (சிங்களத்தில் மொறாவேவ என்று கூறப்படுகின்றது) தற்பொழுது விளைச்சலில் உள்ள சோளம் ஆகும். சோளம் எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்ப வலயப் பகுதிகளிலும், தென்மேற்கு பசிபிக் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகள் உள்ளடங்கலாக பூமியின் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் காணப்படுகின்றது.
இது தானியங்களுக்காகவும் மற்றும் கால் நடைத் தீவனங்களுக்காகவும் பல தரத்தில் பயிரிடப்படுகின்றது. சோளம் ஆனது இலங்கையில் 'இறுங்கு' என சில இடங்களில் அழைக்கப்படுகின்றது. சில சோளம் வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Corn
Photo shows the Maize (or Corn) presently cultivated at Muthalikulam,(Morawewa in Sinhala) Trincomalee, Srilanka. Maize is generally seen Tropical and Subtropical region of all continents of both hemisphere, including south west Pacific and Australia.
Maize is cultivated in numerous varieties throughout the world, which is consumed by human and largely used as fodder as well.
In Srilanka Maize is called Solam (சோளம், இறுங்கு in Tamil) by Tamil speaking people.
வலிகாமத்தின் செம்மண்
Red soil of Valikamam
Uploaded Date: 07/12/2013
வலிகாமத்தின் செம்மண்
யாழ்ப்பாணம் தலை என்றால் வலிகாமம் மூளை என்றும், யாழ்ப்பாணத்தின் புதையல் என்று பலவாறு அழைக்கின்றனர் வலிகாமப் பிரதேசத்தை. காரணம் இங்கு இயல்பாகவே அமைந்துள்ள செம்மண் மூலம் பல வகையான பயிர்கள் பயிரிடப்பட்டு அதிகளவு விளைச்சல் பெறப்படுவதால்.
ஆனாலும் வலிகாமத்து மரக்கறிகளை விட, தம்புள்ள மரக்கறிகள் எவ்வளவோ மேல் என்று இங்குள்ளவர்களே கூறுமளவுக்கு அதீத செயற்கை உரப் பாவைனையால் கெடுகின்றது. வலிகாமத்தின் செம்மண் – மூளை கெடுகின்றது.
Red soil of Valikamam
Valikamam is said to be the brain of Jaffna due to the existence of its Red soil, where number of vegetables are cultivated and which are being consumed by whole peoples in the Jaffna district. But what is disappointing
is that the locals themselves now prefer ‘Dambulla’ vegetables than that of Valikamam vegetables due to the excess usage of fertilizer – the brain is getting damage.
தெஹிவளையில் வெளிநாட்டுப் பறவைகள்
Foreign birds at Dehiwala
Uploaded Date: 23/11/2013
Foreign birds at Dehiwala
Photo shows some of the foreing birds, which migrates during seasonal changes, seen in the little bird sanctuary of Dehiwala Zoo.
தெஹிவளையில் வெளிநாட்டுப் பறவைகள்
படத்தில் காணப்படுபவை வருட கால மாற்றத்தின் போது இலங்கைக்கு வரும் சில வெளிநாட்டுப் பறவைகள். இடம் தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையின் பறவைகள் சரணாலயப் பகுதி.
Hairy Caterpillar
மசுக்குட்டி
Uploaded Date: 16/11/2013
Hairy Caterpillar
Hairy Caterpillar (Masukkoddi or Mayir koddi in Tamil) is a Caterpillar having very thick hair on its body, which protects them from being harmed by others. Hairy Caterpillar neither causes any advantages to human nor to the environment.
Photo shows a 6 cm long, black color Hairy Caterpillar seen in Jaffna Peninsula during North east monsoon (‘Maari’ in Tamil), i.e from October to December.
மசுக்குட்டி
மசுக்குட்டி (வேறு பெயர்கள் மயிர்க் கொட்டி, கம்பளிப் புழு மயிர்க்குட்டி) உடலில் மிக அடர்ந்த மயிர்களைக் கொண்டுள்ள, மனிதனுக்கு நன்மை பயக்காத ஒரு வகைப் புழு. தன்னை தன் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் மயிர்களைக் கொண்டுள்ளது.
படத்தில் காணப்படுவது யாழ்ப்பாணத்தில் மழை காலத்தில் (ஐப்பசி தொடக்கம் மார்கழி வரையான) பரவலாகக் காணப்படும் மசுக்குட்டி ஆகும். இவை பொதுவாக பற்றைகள், மற்றும் மரங்களில் காணப்படுகின்றன. இவ் மயிர்க்குட்டிகள் சுமார் 6 சென்ரிமீட்டர் நீளமும் கறுப்பு நிறமும் கொண்டவையாகும்.
Palmyra Seeds
ஊமல்
Uploaded Date: 09/11/2013
Palmyra Seeds
The photo shows the last remaining part of a Palmyra tree The empty seeds shown in the photo, considered as a worthless by us, are still being used by many people. The seeds are placed below the trees, where they absorb and retain the water when the earth is wet and in turn they release the water slowly when the soil become dry.
ஊமல்
படத்தில் காணப்படுவது பனைமரத்தின் கடைசிப் பொருளான ஊமல்கள் ஆகும். எங்களில் பலரால் கழிவுப்பொருளாகக் கருதப்படும் இந்த ஊமல்கள் இன்றும் பலரால் பயன்தரக் கூடியவகையில் பாவிக்கப்படுகின்றது.
மரங்களுக்குக் கீழ் தாழ்க்கப்படும் இந்த ஊமல்கள் நிலம் ஈரமாக உள்ள போது, நீரினைத் தன்னகத்தே தேக்கி, பின் நிலம் உலரும் பொழுது நீரிணை மெது மெதுவாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Far view of Chunnakam Market
சுன்னாகம் சந்தை
Uploaded Date: 02/11/2013
Far view of Chunnakam Market
Chunnakam is a hub in the Jaffna Peninsula for the vegetable trade, located at about six miles north by north of the city of Jaffna.
படத்தில் காணப்படுவது சுன்னாகம் காய்கறிச் சந்தை. யாழ்தீபகற்பத்தின் காய்கறி வியாபாரத்தில் சுன்னாகம் ஒரு மையமாகத்திகழ்கின்றது