The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.
இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும்.
முதலாம் பிறை
1st Day Crescent
Uploaded Date: 30/05/2014
முதலாம் பிறை
படத்தில் காணப்படுவது மிகவும் அரிதாக புகைப்படமாக்கக் கூடிய முதலாம் பிறையாகும்.
இது அமாவாசைக்கு முந்தைய நாள் ஆகும். இந்த காட்சி வட பசுபிக் சமுத்திரத்தில் புகைப் படமாக்கபெற்றுள்ளது.
1st Day Crescent
Photo shows 1st day crescent of moon, i.e 1 day prior to New moon - An occurrence which is not being easily captured due to the presence of excessive surrounding light.
Photo was taken at North Pacific Ocean
பழைய வல்வை நாயகி
Former Valvai Nayaki
Uploaded Date: 23/05/2014
பழைய வல்வை நாயகி
படத்தில் காணப்படுவது யாழ்பாணத்தின் வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாகர் கோவிலில் வருடாந்த மகோற்சவத்தின் போது பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய பாய்மரக் கப்பலான வல்வை நாயகி ஆகும்.
சுமார் 40 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த இந்த கப்பல் தற்பொழுது அகற்றப்பட்டு, கடந்த வருடம் முதல் புதிய கப்பல் நாகர் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த இரண்டு கப்பலையும் தயாரித்தவர்கள் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த மேஸ்திரிமார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Former Valvai Nayaki.
Photo Shows an old partly broken small sailing boat named "Valvai Nayagi", used to describe a historical event at Nagar Kovil, Jaffna during temple annual festival.
The above broken boat served for more than 40 years has now been replaced by a new sister vessel last year.
It is notable that both the boats have been made by some experts from Valvettithurai, a prominent place known for sea faring too.
தொண்டைமனாற்று ஆற்றுவாய்
Thondaimanaru River Mouth
Uploaded Date: 16/05/2014
தொண்டைமனாற்று ஆற்றுவாய்
படத்தில் காணப்படுவது தொண்டைமானாறு - சுண்டிக்குளம் கடல் நீரேரியின் ஒரு முடிவான தொண்டைமனாற்று ஆற்றுவாய் பகுதி ஆகும். இங்கு கடல் நீரேரியில் உள்ள நீர் வங்காள விரிகுடாவுடன் தொடுப்பினை ஏற்படுத்துகின்றது.
மிகவும் குறுகிய இணைப்பான இப்பகுதி, இந்த வருடம் மண் மேட்டினால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Thondaimanaru River Mouth
Photo shows one of the end of Thondaimanaru - Chunddikkulam lagoon, where the water is getting into Bay of Bengal. Being a very narrow strip, accumulation of sand, at the mouth river, takes place occasionally.
Thondaimanaru - Chunddikkulam lagoon is one of the longest lagoon in this Island.
புகையிலை - Tobacco
Uploaded Date: 09/05/2014
புகையிலை
யாழ்பாணத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் பயிராக புகையிலை இருந்து வருகின்றது.
படத்தில் வல்வையின் கொம்மந்தறை பகுதியில், பயிர்ச் செய்கையின் பின்னான புகையிலைகள் உலர்த்தப்படுவதை காணலாம்.
Tobacco
Tobacco is considered to be bringing the highest revenue to Jaffna Peninsula. Photo shows Tobacco leaves are made dry, at Kommantharai, Valvettithurai, Jaffna.
திருநெல்வேலியில் பசுமையான அலுவலகம்
Office covered by Greenery in Thirunelvely
Uploaded Date: 02/05/2014
திருநெல்வேலியில் பசுமையான அலுவலகம்
படத்தில் காணப்படுவது யாழ்பாணத்தின் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள 'மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தின்' அலுவலகம் ஆகும். குறித்த அலுவலகம் செடி மற்றும் கொடிகளால் சூழப்படும்வகையில் அமைக்கப்பெற்றுள்ளது - ஒரு முன் உதாரணம்.
Office covered by Greenery in Thirunelvely
Photo shows an Administrative office of 'District agricultural training centre', Thirunelvely, Jaffna, which has been covered by greenery, thus making an example itself.
Beach house at Mayiliyathanai
மயிலியதனையில் உள்ள கடற்கரை வீடு
Uploaded Date: 25/04/2014
Beach house at Mayiliyathanai
Photo shows a beach house at Mayiliyathanai, Valvettithurai, similarly seen in the developed coasts.
மயிலியதனையில் உள்ள கடற்கரை வீடு
படத்தில் காணப்படுவது பருத்தித்துறை - காங்கேசந்துறை வீதியில் மயிலியதனையில் அமைந்துள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கடற்கரைகளில் காணப்படுவதை ஒத்த ஒரு வீடாகும்.
Ice Cream Van in Jaffna
யாழில் ஐஸ் கிரீம் வண்டி
Uploaded Date: 19/04/2014
யாழில் ஐஸ் கிரீம் வண்டி
Ice Cream Van in Jaffna
யாழில் ஐஸ் கிரீம் வண்டி
யாழ்பாணத்தில் பிரத்தியேகமாக காணப்படும் விடயங்களில் ஒன்றில் இதுவும் ஒன்றாகும். வீதி வீதியாகச் சென்று வண்டிகளில் மேற்கொள்ளப்படும் ஐஸ் கிரீம் விற்பனை தற்போது நிகழும் கோடை காலங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது.
படத்தில் தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முன் வீதியில் செல்லும் ஐஸ் கிரீம் வண்டி.
Ice Cream Van in Jaffna
Selling of Ice cream on the roads by Van is considered as one the notable long lasting event in Jaffna too. It is more prominent and attracts many customers during dry season, after the North east monsoon.
Photo shows an Ice cream van on Thondaimanaru Selva Sannithi front road
கிராமியக் காட்சி - பெரம்பலூர்
Scenery of a Village - Perambalur
Uploaded Date: 12/04/2014
கிராமியக் காட்சி
தகவல் தொழில் நுட்ப வசதி, வேலை வாய்ப்பு, சிறந்த கல்வி வசதி இவ்வாறாக பல வசதிகளைத் தேடி கிராமத்திலிருந்து மக்கள் நகரங்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்தாலும் மலைகள், மரங்கள், வயல் வெளிகள், தோட்டங்கள், மந்தைகள், கமக்காரர் என அழகாகக் காட்சி அளிக்கின்றது தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இக்கிராமம். இவைகள் இல்லை என்றால் எமது கமராக்களிற்கு என்ன வேலை?
Scenery of a Village
Even though Towns are admiring peoples from villages so as to give Job opportunities, vast educations and many more other better facilities, still most of us love typical Villages having mountains, tress, fields, cattle
and farmers. If they are absent what would we do with our cameras?
Photo – Typical beautiful village, in Perambalur of Tamil Nadu, India
Internal Hull of a boat
வள்ளத்தின் உட்பக்கத் தோற்றம்
Uploaded Date: 06/04/2014
வள்ளத்தின் உட்பக்கத் தோற்றம்
படத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு இலங்கையிலேயே தயாரிக்கப்பெற்ற வள்ளம் ஒன்றின் உட்பக்கத் தோற்றம் ஆகும். பாரிய வர்த்தகக் கப்பல்களின் கட்டுமானங்கள் போல், இந்த வள்ளத்திலும் தாக்கம் கூடிய இடங்களில் சட்டங்களின் (Frames) இருப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது காணமுடிகின்றது. முந்தைய காலங்களில் வல்வெட்டித்துறை கப்பல் கட்டுவதில் ஆச்சிரியப்படத்தக்க புலமை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Internal Hull of a boat
Photo shows an internal hull of a deep sea fishing boat (Called "Vallam" in Tamil) made locally. It could be seen easily in the Photo that the arrangement of the frames resemble a largest steel commercial Vessel, i.e number of frames are increased where the vessel is subject to pounding while steaming. Valvettithurai had got remarkable ship building knowledge and experience in the past.
அருவி கையெழுத்துச் சஞ்சிகை
Hand written magazine 'Aruvi'
Uploaded Date: 28/03/2014
அருவி கையெழுத்துச் சஞ்சிகை
படத்தில் காணப்படுவது 1975 யில் வெளிவந்த அருவி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையின் முதற்பக்கம் ஆகும். அருவி உட்பட்ட பல கையெழுத்துச் சஞ்சிகைகள் முந்தைய காலங்களின் வல்வையின் இலக்கியத்துறைக்குச் சான்று பகிர்கின்றன.
Hand written magazine 'Aruvi'
Photo shows the cover page of a hand written magazine called "Aruvi" (Water fall in English), published in 1975 at Valvettiturai. "Aruvi" joins with many other hand written magazines had witnessed Valvettithurai's literary in the past.