Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு நிகழ்வாக வினோத உடைப் போட்டிகள் நேற்று முற்பகல் நடை பெற்றிருந்தது. கண்களைக் கவர்ந்து....
வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் காலை போட்டிகள் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்றன.
எதிலும் ஒரு மாற்றத்தைக் காட்டும் ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பைக் கொண்ட வல்வை நகரில், பல விளையாட்டுக்கழகங்கள் உள்ளது குறிபிப்டத்தக்கது. இவற்றில் உதயசூரியன் விளையாட்டுக்கழகதம் கடந்த வருடம் 50 ஆவது வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிற்பகல் சுமார் 4.00 மணி மணியளவில் மங்கள விளக்கேற்றல், மற்றும் சிறுவர் அணிவகுப்பு ஆகியவற்றுடன் ஆரம்பமாகியிருந்த நிகழ்வுகளில் உதயசூரியன் கழகக் கொடியை திரு.தி.கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றி விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்திருந்தார். நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.s.சிறிகாந்தன் (முகாமையாளர், இலங்கை வங்கி, வல்வெட்டித்துறை) கலந்து சிறப்பித்திருந்தார்.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, இரண்டாம் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று காலை நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து ஆரம்பமாகியது.
யாழ்பாணத்தின் வடமராட்சியில் வல்வெட்டித்துறை உட்பட சில பகுதிகளில் நேற்றிலிருந்து ஓரளவு மழை பெய்துவருகின்றது. அதிலும் குறிப்பாக நேற்று இரவு குறிப்பிடக்கூடிய மழை பெய்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஆடிப்பூரத் திருவிழா நேற்று சகல அம்மன் ஆலயங்களிலும் கொண்டாடப்பட்டது. படங்களில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்றிருந்த ஆடிப்பூர திருவிழா நிகழ்வினைக் காணலாம்.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, முதல் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகியது. மிகவும் வித்தியாமான முறையில் நடாத்தப்பட்ட இன்றைய நிகழ்வுகளில் யாழ்பாணத்தில் முதன்முறையாக முப்போட்டிகள் எனும் கோணத்தில் இடம்பெற்றிருந்தது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 ஆடி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை பொதுமக்களினதும் மற்றும் நலன் விரும்பிகளினதும் கவனத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. முதல் நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை 09.08.2013) பி.ப 02.00 மணிக்கு நீச்சல் போட்டி, கட்டுமரம் வலித்தல் , படகோட்டம் , நீச்சல் சைக்கிள் ஓட்டம் அடங்கிய முப்போட்டி....
வல்வை வாலாம்பிகை அம்மன் கோவில் மகோற்சவம் கடந்த (31-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இன்று 08.08.2013 தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலய மகோற்சவம் கடந்த (29-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்று, தீர்த்தத்திருவிழா கடந்த 06.08.2013 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று மாலை 05.30 மணியளவில் தெப்பத்திருவிழாவிற்கான பூசைகள் நடைபெற்று, உதயசூரியன் கடற்கரையில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரா நலன்புரி வலையமைப்பினால் (CWN) எதிர்வரும் 14.09.2013 அன்று நடாத்தப்படவுள்ள
சிதம்பரா கலைமாலை, கணிதப்போட்டி 2013 ன் பரிசளிப்பு விழா சம்பந்தமான கூட்டம் எதிர்வரும் 12.08.2013 அன்று நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக CWN வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும்.
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின், ஆரம்ப போட்டி இன்று மாலை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்துள்ள சென் செபஸ்தியர் தேவாலயப் புனரமைப்புக்கு நிதி உதவி கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் PM foundation முயற்சிகளை எடுத்திருந்தனர். அதற்கமைய பலர் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். இது சம்பந்தமாக PM foundation வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வெட்டித்துறைச் சந்தியில் கடந்த பல வருடங்களாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளிலிருந்து வெளியேறவுள்ளாதாக பரவலாக நம்பப்படுகின்றது. இன்னும் 3 வார காலத்தில் அப்பகுதிகளிலிருந்து தாம் வெளியேறவுள்ளதாக வல்வெட்டித்துறை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி தம்மிடம் இன்று கூறியதாக வல்வை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலய மகோற்சவம் கடந்த (29-07-13) அன்று ஆரம்பமாகி பத்து தினங்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் இறுதி நாளான 06.08.2013 அன்று தீர்த்தத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 ஆம் திருவிழா அமையவுள்ளது. பூஜை முறைகள், விளக்கு எடுத்தல்....
பார்க்க வேண்டிய ஓர் மிகச் சிறிய காணொளி. மில்றோய் அன்ரனி என்பவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்துள்ள தமிழர்கள் பற்றிய ஆவணப்படம் இதுவாகும். ஆவணப்படத்தின் சாராம்சம் இதுதான்.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02.08.2013 ஆகும். இதனை முன்னிட்டு அன்னபூரணி மற்றும் வல்வையின் கடலியல் தொடர்புபட்ட விடையங்களை, இவ்விடையத்தில் ஆர்வமுள்ள சிலர் தொகுத்து வருகின்றனர்.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின்,சப்பறத்திருவிழா 19.08.2013 அன்று, தேர் திருவிழா 20.08.2013 அன்றும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 21.08.2013 அன்றும், பூங்காவனம் 23.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் 22.08.2013 அன்று மாலை வன்னி மர விநாயகர் பொங்கலும் இடம்பெறும்.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02.08.2013 ஆகும். அன்னபூரணி தொடர்பாக வந்திருந்த சில பத்திரிகைச் செய்திகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார்கள் வல்வை ஆவணக் காப்பகத்திச் சேர்ந்த திரு நகுலசிகாமணி அவர்கள்.
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரையில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. மாலை சுமார் 5.00 மணியளவில் வேட்டை ஆடுவதற்காக பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய வீதிக்கு சென்று, அங்கு வேட்டை ஆடியபின் அங்கிருந்து வாலாம்பிகை வைத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து தமது ஆலயத்தை நோக்கி திரும்பினார்.
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தினால் 50 ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த விளையாட்டுப்போட்டியை முன்னிட்டு பொது மக்களால் இன்று மாலை 04.30 மணியளவில் உதயசூரியன் கடற்கரையில் சிரமதான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரையில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. காலை சுமார் 13.00 மணியளவில் ஆரம்பமாகி பூங்காவனத் திருவிழா பிற்பகல் 16:00 மணி வரை நடைபெற்றிருந்தது.
இலங்கையில் பிரசித்தி பெற்ற செல்வச் சந்நிதி முருகன் ஆலய உற்சவம் வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாவதையிட்டு மிகவும் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய சில வேலைகளை நடைமுறைப் படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உள்ளுராட்சி உதவி ஆணையார் திணைக்களத்திலிருந்து எதுவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனத்தெரியவருகின்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.