Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாணசபைத் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் வல்வெட்டித்துறைக்கு விஜயம் செய்திருந்தார். சுமார் 10 மணியளவில் வல்வை வந்திருந்த திரு.விக்னேஸ்வரன் அவர்கள் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள.......
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களர் அட்டை கிடைக்கப் பெறாதவர்களும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துக் கொண்டிருக்கின்றது. ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனத்தில் காவல்துறையினர் சகிதம் இன்று காலை வல்வெட்டித்துறைப்......
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாணசபைத் தேர்தல் வாக்குப் பதிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் தனது வாக்குப் பதிவை சற்று நேரத்துக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார்.
சுமார் 9 மணியளவில் வல்வை சிதம்பரக் கல்லூரியில் அமைந்துள்ள.........
வடக்கு, வடமேல், மற்றும் வடமத்தி மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்துக்கு முன்னர், இலங்கை நேரப்படி இன்று காலை 07:00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதில் வடமாகாண சபைத் தேர்தல் 25 வருடங்களின் பின்னர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் .........
அவுஸ்திரேலியாவிலுள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினால், வல்வையில் வாழ்ந்த சில பெருந்தகைகளைக் கௌரவிக்கும் மற்றும் நினைவுகூரும் வகையில் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அஞ்சல் தலைகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அஞ்சல் திணைக்களத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட .....
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் சமுத்திரத்தீர்த்த சிறப்பு நிகழ்ச்சி மற்றும் நாக மாலை இசைத்தட்டு வெளியீடு எதிர்வரும் திங்கட்கிழமை 23.09.2013 அன்று மாலை 07.00 மணிக்கு நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றில் நடைபெறவுள்ளது. இந் இன்னிசை நிகழ்விற்கு தென்னிந்திய பின்னணிப்பாடகர்களான கலைமாமணி பத்மஸ்ரீ வைத்திய கலாநிதி சீர்காழி .........
தேர்தல் பிரச்சாரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுற்றதையடுத்து, வல்வெட்டித்துறையில் காவல் துறையினர் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் வீதிகளில் வரையப்பட்டுள்ள தேர்தல் சின்னங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திர புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இன்று பிற்பகல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுத்திர தீர்த்தோற்சவத்திற்கான பூசைகள் பிற்பகல் 02.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, மாலை 0400 மணியளவில் விநாயகர், சக்கரத்தாழ்வார், மகாலக்ஷ்மி ஆகியோர்........
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நாளை பிற்பகல் 04.00 மணியளவில் சிரமதான பணிகள் நடைபெறவுள்ளதாக ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் அறிவித்துள்ளனர். இது சில வாரங்களுக்கு முன்னர்........
இன்று அதிகாலை 03.00 மணி முதல் அபிஷேகம், பூஜை, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 06.00 மணிக்கு இரதம் புறப்பட்டது. தற்பொழுது (08.00 மணி) கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
கெருடாவில் மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு மாயவர் ஊறணி தீர்த்தக் கடலில் தீர்த்தமாடினார். இன்று காலை 1000 மணியளவில் ஆரம்பமாகிய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாயவர் மயிலியதனை, ஊரிக்காடு, வல்வெட்டித்துறை சந்தி வீதியூடாக ஊறணி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினார். .....
தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை சுமார் காலை 0630 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்து, திருவிழா 0930 மணியவில் நிறைவுற்றது. கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா.........
எதிர்வரும் 21 ஆம் திகதி, அதாவது நாளை மறுதினம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நேற்று பருத்தித்துறையில் நடைபெற்றது. பருத்தித்துறை சென் தோமஸ் தேவாலயத்தை அண்டிய கடற்கரைப் பகுதியில், சுமார் 08:00 மணியளவில் ஆரம்பித்திருந்த கூட்டம் இரவு 11:00 மணிவரை நீடித்திருந்தது.
இப் பிரச்சாரக் கூட்டத்தில்
கொழும்பு தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஷ்ணு மூர்த்தி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. நாளை அதிகாலை 03.00 மணி முதல் அபிஷேகம், பூஜை, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 06.00 மணிக்கு இரதம் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் மற்றும் வேட்பாளரும் வர்த்தகர் சங்கத் தலைவருமாகிய திரு ஜெயசேகரம் இன்று இரவு வல்வெட்டித்துறையின் புறநிலப் பகுதிகளான உடுப்பிட்டி இலையடி பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் நேற்றைய 2 ஆவது சுற்றுப் போட்டியில் கரவெட்டி நவசக்தி அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில்........
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 14 ஆம் திகதி மாலை 03.00 மணியளவில் Fairfield Hall, Croydon லண்டனில் சிறப்பாக நடைபெற்றது என சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) அறிவித்துள்ளது.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டமொன்றிலுள்ள வாழை மரத்தில் முற்றிலும் வித்தியாசமான முறையில் அதன் இடைப்பட்ட வாழைத்தண்டில் இருந்து வாழை மொத்தி (வாழைக்குலை ) ஒன்று உருவாகியுள்ளது. சுமார் 7 அடி உயரமுள்ள குறிப்பிட்ட வாழையில்...
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் நேற்று வல்வெட்டித்துறையின் புறநிலப் பகுதிகளான கெருடாவில் மாயவர் கோவில் மற்றும் உடுப்பிட்டி வீரபத்திரர் கோவில் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு.....
வடமாரட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் தொண்டைமானற்று புதிய பாலம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் சுமார் 11.00 மணியளவில் நடைபெற்ற இவ் வைபவத்தில்....
"தயவு செய்து சிரமம் பாராது வாக்களியுங்கள்" எனும் தலைப்புடன் மனித உரிமைகள் இல்லத்தினால் துண்டு பிரசுரம் நேற்று யாழ்பாணத்தின் பல பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. இதில் எவ்வாறு வாக்களிப்பது, வாக்களிக்க செல்லும் போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவம் என்பன பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. மேலும்
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய போட்டியில் கரவெட்டி நவசக்தி அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது. உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 04.30 மணியளவில் குறிப்பிட்ட போட்டி நடைபெறவுள்ளது. யாழ்.........
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் நேற்று வல்வெட்டித்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். வல்வெட்டித்துறையின் பிரதான பாதைகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வாக்குச் சேகரிக்கும் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
வல்வெட்டித்துறையில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சுற்று வளாகத்தில், ஆலய தர்மகர்த்தா சபையினால் அமைக்கப்பட்டுவரும் 'வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கலாச்சார மண்டப' கட்டடப் பணிகள் இன்னும் சில வாரங்களில் பூர்த்தியாகும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்யாண மண்டபம்.............
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று தொண்டைமானாற்றில் இன்று மதியம் நடைபெற்றது. இன்று மதியம் 12:30 மணியளவில், தொண்டைமானாறு பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற..........
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) வல்வெட்டித்துறையில் தற்பொழுது தரம் 9 தொடக்கம் 11 வரையிலான தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றது. VEDA வை விரிவாக்கும் முயற்சியாகவும், வல்வை மாணவர்களின் தேவை கருதியும், தரம் 6, 7, 8 ஆம் ஆண்டுகளுக்கான வகுப்புக்களையும் ஆரம்பிப்பதில் தொடந்து முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது.
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று வல்வெட்டித்துறையில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. வீடு வீடாக திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள்..
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுதசாமி ஆலயத்தில் நேற்று எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜீர்நோத்தாரண அஸ்டபந்தன கும்பாபிசேகத்தையொட்டி, கடந்த 9 ஆம் திகதி கும்பாபிசேக கிரியாரம்பம இடம்பெற்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னனி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதையொட்டி நேற்று யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அறிவிப்பு வல்வெட்டித்துறையிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் கோவிலில் இன்று 'பிட்டுக்கு மண் சுமத்தல்' சிறப்புற நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் வரும் ஆவணி மூலத்தில் நிகழும் இந்த நிகழ்வு சகல சிவன் கோவிலிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வைகையாறு பெருக்கெடுத்த பொழுது,.....
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.