Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தாத்தாவே நும் திடந்தனை எமக்குத் தா! தா!! - தாத்தா மறைவு - வல்வை வி.க அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2013 (வெள்ளிக்கிழமை)    
கடந்த 10 ஆம் திகதி காலமான முதுபெரும் விளையாட்டு வீரரும், வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான திரு. சிவகுரு தாத்தா அவர்களின் மறைவையொட்டி, வல்வை விளையாட்டுக் கழகம் தமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...] 
கொழும்பு - கிளிநொச்சி புகையிரத சேவை விரங்கள், நாளை மறுதினம் சேவைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கான புகையிரத சேவைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகள் பற்றிய நேர மற்றும் கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி 3 புகையிரத சேவைகள் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கும், எதிர் வழியாக கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கும் நடைபெறவுள்ளன. அவைகளின் விபரங்கள் பின்வருமாறு,
[மேலும் வாசிக்க...] 
சிதம்பராவில் ஒரு நாடகத்தில் தாத்தா வேடத்தில் நடித்ததனால் தாத்தா என அழைக்கப்பட்டவர் - முன்னாள் விளையாட்டு வீரர் A.R.சிவகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையின் முன்னாள் விளையாட்டு வீரரும், சிறந்த நாடகக் கலைஞரும், ஓய்வு பெற்ற தபால் அதிபருமான திரு. அருணாசலம் இராமசாமி சிவகுரு (தாத்தா) அவர்கள் கடந்த 10 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 91. சிதம்பராவில் ஒரு நாடகத்தில் தாத்தா வேடத்தில் நடித்ததனால் தாத்தா என......
[மேலும் வாசிக்க...] 
நவசக்தி வி.கழக 50 ஆவது ஆண்டு நிறைவு உதைப்பந்து போட்டி - இன்று வல்வை மற்றும் வதிரி பொம்மர்ஸ் மோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2013 (வியாழக்கிழமை)     [photos]
வதிரி நவசக்தி விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று வதிரி மொம்மஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா, முன்னேற்பாடுகள் தீவிரம் - CWN
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2013 (வியாழக்கிழமை)     [photos]
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) அறிவித்துள்ளது. இது சமந்தமாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
[மேலும் வாசிக்க...] 
அன்னபூரணி 75 கலைத்திருவிழா கனடாவிலும் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும். இதனை முன்னிட்டு கடந்த 7 ஆம் திகதி கனடாவின் ரொரண்டோ நகரில் அன்னபூரணி 75 கலைத்...
[மேலும் வாசிக்க...] 
வேதாரண்யம், கோடியாக்கரை மற்றும் வல்வெட்டித்துறை - தொடர்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2013 (புதன்கிழமை)     [photos]
வடஇலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமான கடல் வழித்தொடர்பின் மையப்புள்ளிகளாக கருதப்பட்டவை வடஇலங்கையில் யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறையும், தமிழகத்தின் நாகபட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியாக்கரையும் ஆகும். வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன், கோடியாக்கரையிலிருந்தே படகினில் வல்வை வந்ததாக ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன
[மேலும் வாசிக்க...] 
ZICTEC இல் க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தோற்றியோருக்கான கணினி, ஆங்கில வகுப்புகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2013 (செவ்வாய்க்கிழமை)    
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் தகவல் தொடர்பாடல் கல்வி நிலையத்தில் - ZICTEC (மந்திகை அருகில் புலோலி மெதடிஸ் மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ளது) க.பொ.த(உ.த) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள், கணினி பயிற்சி நெறிகள் (Ms Office, Desk Top Publising, Web Design, Hardware) நாளை ஆரம்பமபகவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
பம்பலப்பிட்டிய மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறுகின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கொழும்பு பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று காலை சுமார் 07:30 மணியளவில் வசந்த மண்டைப் பூசை இடம்பெற்றது. இதன் பின்னர் சுவாமி தேரினிலே காலி வீதி வழியாக, தற்பொழுது (13:00 மணி) கொழும்பு, வெள்ளவத்தையை வந்தடைந்துள்ளது.
[மேலும் வாசிக்க...] 
யாழின் பெருஞ் சமர் - ஊரெழு றோயல் நாடத்தும் யாழின் 60 கழகங்கள் பங்கு பற்றும் உதை பந்துப் போட்டி, இன்றைய சுற்றில் வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது. இச்சுற்றில் வல்வை விளையாட்டிக்கழகத்தை எதிர்த்து அராலி ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...] 
VEDA வின் ஆவணி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 ஆவணி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை பொதுமக்களினதும் மற்றும் நலன் விரும்பிகளினதும் கவனத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
முழு நிகழ்வுகளின் தொகுப்பு - ரெயின்போ வி.கழக 71 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் நேற்று இரவு 11 மணியளவில் நிறைவு பெற்றது. நிகழ்வுகளின், செய்திகள் மற்றும் படங்கள் உட்பட்ட, முழுத் தொகுப்பும் கீழே இணைக்கப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
எமது இணையதள வாசகர் எண்ணிக்கை - ஐக்கிய இராச்சியம் 1 ஆம் இடத்துக்கு முன்னேறியது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
எமது இணைய தளமான Valvettithurai.org ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையில் உள்ள வாசகர்களுக்கு அடுத்த படியாக அதிக வாசகர்களைக் கொண்டிருந்த ஐக்கிய இராச்சியம் (United Kingdom) கடந்த சில நாட்களில் வாசகர்களின் எண்ணிக்கையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. வாசகர் எண்ணிக்கையில் 3 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் இடங்களிலுள்ள கனடா, இந்தியா மற்றும் அவுஸ்திரலியாவின் வாசகர் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...] 
களைகட்டிக்கொண்டிருக்கும் ரெயின்போ வி.க இறுதிப் போட்டிகள் - 2
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ வி.கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இல்லப் போட்டிகள் முடியும் தறுவாயில் தற்பொழுது பார்வையாளருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செய்திகள் மற்றும் படங்கள் Valvettithurai.org யினால் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
[மேலும் வாசிக்க...] 
ஆழிக்குமரன் மற்றும் மகோற்கடமூர்த்தி என இல்லங்களுடன் ரெயின்போ வி.கழக 71 வது ஆண்டு இறுதி நிகழ்வு ஆரம்பம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் வேவில் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் ஆரம்பமாகியுள்ளது. விருந்தினர்கள் வல்வெட்டித்துறை வேம்படிச்........ (படங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன)
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு இறுதி நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும் நிகழ்வுகளும் இன்று நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 02:30 மணியளவில், ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கு அக் கழகத் தலைவர் திரு.முரளி அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
[மேலும் வாசிக்க...] 
இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கிடையேயான அறிவுசார் பரீட்சை சிவகுரு வித்தியாசாலையில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)     [photos]
இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவுசார் பரீட்சையானது இன்று யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகரத்தை சுற்றியுள்ள 5 அறநெறிப் பாடசாலைகள் இதில் விண்ணப்பித்திருந்தன. மேற்குறிப்பிட்ட பரீட்ச்சைக்கு மாணவர் வரவு சுமார் 60-70% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ......
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோவில் தீர்த்த திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோயில் இன்று காலை 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் தீர்த்தத்திருவிழா ஆரம்பமாகியது. அதன் பின் அம்மாள் 08.30 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரையை அடைந்து அங்கு தீர்த்தமாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...] 
இன்று காலை இடம்பெற்ற பார்வையாளர் போட்டிகள் - வல்வை ரெயின்போ வி.கழக 71 வது ஆண்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் இன்று பார்வையாளருக்கான (வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு உட்பட்ட) போட்டிகள் நடைபெற்றன. இன்றைய போட்டியின் இறுதி நிகழ்வாக இரு நபர்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் பரவலாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)    
யாழ் தீபகற்பகத்தின் வல்வெட்டித்துறை உள்பட்ட பல இடங்களில் நேற்றும், இன்றும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு வல்வெட்டித்துறையில் குறிப்பிடக்கூடிய மழை பெய்திருந்ததுடன் தற்பொழுதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை ரெயின்போ வி.கழக 71 வது ஆண்டு - இன்று பார்வையாளர் நிகழ்வுகள் நடைபெறுகின்றன, நாளை இறுதி நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் இன்று பார்வையாளருக்கான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நாளை இறுதி நிகழ்வுகள் கழக மைதானத்தில் பிற்பகல் 02:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ வி.க 71 ஆம் ஆண்டு நிறைவு விழா, இல்லங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டிகள் நேற்று மாலையும் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் , இல்லங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டிகள், நேற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வையில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தில் வணக்கத்துடன் ஆரம்பித்திருந்த இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன்......
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ விளையாட்டுக்கழக 71 வது ஆண்டு இறுதி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு தற்பொழுது நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும்....
[மேலும் வாசிக்க...] 
ரெயின்போ வி.க 71 ஆம் ஆண்டு நிறைவு விழா, இல்லங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் , இல்லங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டிகள், நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தெரிவுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
கரவட்டி நவசக்தி வி.கழக 50 வது ஆண்டு நிறைவு உதைபந்துப் போட்டி, வல்வை வி.க அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ்பாணம் கரவட்டி நவசக்தி விளையாட்டுக் கழகமானது தனது 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தி வரும் யாழ் மாவட்ட ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் நேற்று யாழ் சுடரொளி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டு வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது. இதில் வல்வை விளையாட்டுக்கழகம் 5 : 2 என்ற.....
[மேலும் வாசிக்க...] 
மிக துல்லியமாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுவரும் மாதிரி அன்னபூரணி, இறுதி வடிவ கண்ணாடிப்பேழை 6 x 3 x 6 வடிவில் அமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும். இதனைச் சிறப்பிக்கும் வகையில் வல்வையில் அன்னபூரணி மாதிரிக் கப்பல் ஒன்று எமது முயற்சியினால்.....
[மேலும் வாசிக்க...] 
தமிழில் மிக இலகுவாக தட்டச்சு (Type) செய்வது எப்படி?
பிரசுரிக்கபட்ட திகதி: 04/09/2013 (புதன்கிழமை)     [photos]
தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய மிக நவீன வசதிகள் தற்பொழுது உள்ள பொழுதிலும், இன்னும் சிலர் இவை பற்றி அறியாமல் உள்ளனர். இதனைக் கருதத்தில் கொண்டும், எமது சில போசகர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தமிழில் தட்டச்சு (Type) செய்வது எப்படி என்பதை மிக இலகுவான வழிமுறைகளில், தேவையான படங்களுடன் (Screen shots) தெரிவித்துள்ளோம்.
[மேலும் வாசிக்க...] 
கின்னஸ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் (திரு.குமார் ஆனந்தன்) பற்றிய விபரங்களின் குறிப்பிடக்கூடிய பெரும் பகுதி எம்மால் திரட்டப்பட்டுள்ளன. வல்வையின் நலன் விரும்பி ஒருவரின் உதவி மூலம், ஆழிக்குமரன் ஆனந்தனின் உறவினரிடமிருந்து இவ் விபரங்கள், வாய்மொழி உட்பட்ட பல விடயங்கள், திரட்டப்பட்டுள்ளன. திரட்டப்பட்டுள்ள விபரங்களில் கூடுதலானவை 1962 ஆண்டுக்கு....
[மேலும் வாசிக்க...] 
60 லட்சம் ரூபா செலவிலான வல்வை சனசமுக சேவா நிலையம் எதிர்வரும் விஜயதசமி அன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறைச் சந்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 'வல்வெட்டித்துறை சனசமுக சேவா நிலையத்தை' எதிர்வரும் விஜயதசமி அன்று உத்தியோகபூர்வமாக திறக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அறியப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai