Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக இதுவரை இருந்துவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் அண்மையில் நடைபெற்றிருந்த வடமாகாணசபைக்குத் தெரிவானதையடுத்து தனது நகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இவரின் இடத்துக்கு புதிய உறுப்பினர் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை. வாக்குகளின் அடிப்படியில்..............
தும்பளை விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 15 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகம் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் 14.3 பந்துப் பரிமாற்றத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து .....
எமது இணையதளத்தில் பல பகுதிகளுக்குமுரிய தேடல் (Serach) பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரை இருந்த பக்கக் கட்டுப்பாடுகளும் (Page Restriction) நீக்கப்பட்டுள்ளன. இதனால் வாசகர்கள் இணையத்தில் பிரசுரமாகியுள்ள செய்திகள், படங்கள், அறிவித்தல்கள், அழைப்பிதழ்கள் போன்றவற்றை இலகுவாக...
மதுரை மீனாட்சி, சுபத்திரையம்மா மற்றும் சோமசுந்தரம் போன்ற பல கப்பல்களைத் தன்னகத்தே வைத்திருந்து தூரதேச கப்பல் வாணிபத்தைத் தொடர்ந்திருந்தவர் சின்னத் தங்கம் அவர்கள். கப்பல் வாணிபத்துடன் மட்டும் நின்று விடாது, வல்வையில் இந்து சமயப் பணிகளிலும் அதிகம் ஈடுபட்டிருந்த இவர், தனது கப்பல்கள் வல்வெட்டித்துறைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் முன்னர்...
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடரின் லீக் முறையிலான நேற்றைய ஆட்டத்தில், ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உதயசூரியன் கழகம் மோதியது. இப் போட்டியில் ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
இந்த தொடரில் பங்குபற்றிய 5 கழகங்களில், தற்பொழுது Play Off சுற்றுக்கு நான்கு கழகங்கள் தெரிவாகியுள்ளன.....
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திர புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 19.09.2013 அன்று பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்தீர்தோற்சவத்தின், சமுத்திர தீர்த்தத்தின் காணொளியின் ஒரு பகுதி (இறுதிப் பகுதி) இணைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை மண்ணாச்சி மணல் பகுதியில் அமைந்துள்ள பெண் கப்பல் முதலாளியான திருமதி சரவணமுத்து சின்னத் தங்கத்தின் சமாதியின் சீரமைப்புப்பணிகள் கடந்த சில வாரங்களாக அவரது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்திருந்தது. தற்பொழுது இப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளது.
கீழேயுள்ள படங்கள் கடந்த 16 ஆம் திகதி சீரமைப்புப் பணிகள் இடம்பெற்ற......................
யாழ் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய கால் இறுதியாட்டத்தில் வதிரி டைமன்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டு கழகம் மோதவிருந்தது. ஆனாலும் இப்போட்டியானது வதிரி டைமன்ஸ் மற்றும் யாழ் வளர்மதி ஆகிய கழகங்களுகிடையிலான.......
வல்வெட்டித்துறை சந்தி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலிருந்த இராணுவத்தினர், ஊரிக்காட்டுப் பகுதிக்கு மாற்றமாகிவருவதையொட்டி, இப் பகுதிகளின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைப் பகுதியில், இலங்கை சுங்க அதிகாரிகள் அண்மையில் அறிவிப்புப் பலகைகளை நாட்டியுள்ளனர். 'இவ் ஆதனம் இலங்கை சுங்கத்துக்குரியது' எனப் பெயரிடப்பட்டு.............
யாழ் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் கால் இறுதியாட்டம் இன்று பிற்பகல் உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வதிரி டைமன்ஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.
400 மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம் 73 மீட்டர் உயரம் அளவுகளையுடைய மிகப் பாரிய கொள்கலன் கப்பல்கள் இருபதை டென்மார்க்கின் Mearsk எனப்படும் கப்பல் நிறுவனம் சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. 'கடலியலின் பிரமாதம்' எனக் கருதப்படும் இக் இக்கப்பல்கள் 18,000 Teus (Twenty Equivallent Units) கொள்ளளவுடைய சுமார் 27,000 லொறி பொருட்களை ஒரே நேரத்தில் கொண்டு செல்லக் கூடியவை.
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடர் நேற்றும், இன்றும் மாலையும் 04.00 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றன. நேற்றைய போட்டியின் முதலாவது போட்டியாக உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் ...
கீழே காட்டப்பட்டுள்ளவை சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் 'Tug Master' ஆகப் பணிபுரிந்தவர்களின் அரிதான புகைப்படங்கள் ஆகும். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே கடலியலில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியிருந்த வல்வெட்டித்துறை வாசிகள், தமக்கென்று மாலுமிகள் சங்கம் வைத்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தினிலும்.....
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் மின்னொளியில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதி , இறுதிப் போட்டிகள் நேற்றய தினம் மாலை 7.30 மணியளவில் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. Play Off முறையிலமைந்த அரையிறுதிப் போட்டிகளில் .......
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திரப் புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 19.09.2013 அன்று பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்தீர்தோற்சவத்தின் காணொளியின் ஒரு பகுதி கீழே இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வல்லிபுர ஆழ்வார் ஆலய வீதியில் பகுதியில் படமாக்கப்பட்டது.
நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் சமுத்திரத்தீர்த்த சிறப்பு நிகழ்ச்சி மற்றும் நாக மாலை இசைத்தட்டு வெளியீடு நேற்று திங்கட்கிழமை மாலை 07.00 மணிக்கு நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முன்றில் நடைபெற்றது.
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் நேற்றைய தினம் மாலை நடாத்தப்பட்டது. முதலில் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுத் தொடரில் வல்வை உதயசூரியன் கழகமும் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகமும் .....
வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அங்கத்தினர் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று லண்டனில் எதிர்வரும் மாதம் 27 ஆம் திகதி மாலை 3.00 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரை நடைபெறவுள்ளதாக, லண்டன் தீருவில் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்துள்ளனர். தீருவில் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சி பற்றி இவ் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதானமாக கலந்துரையாடவுள்ளதால்..........
யாழ்ப்பாணம் வடமாரட்சி பருத்தித்துறை கிழக்கில் அமைந்துள்ள சரித்திர புகழ் பெற்ற வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 19.09.2013 அன்று பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இத்தீர்தோற்சவத்தின் காணொளியின் ஒரு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கற்கோவளம் சமுத்திரப் பகுதியில் படமாக்கப்பட்டது
வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அங்கத்தினர் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று லண்டனில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, லண்டன் தீருவில் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
இக்கலந்துரையாடலானது சரஸ்வதி பூஜை(விஜயதசமி) யை முன்னிட்டு இந்த நிகழ்வு வேறு ஒரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக.........
நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்று மாலை அவருக்கு வல்வைப் பிரதேசத்தில் குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மாலை யாழில் இருந்து திரும்பிய......
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்தப்படும் தண்ட உதைப்பந்தாட்டப் போட்டியானது இன்று மாலை 04.00 மணியளவில் ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இப்போட்டியில்...........
நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் வெற்றி பெற்றுள்ளார் எனத்தெரியவருகின்றது. உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்தப்படும் தண்ட உதைப்பந்தாட்டப் போட்டியானது வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியானது....
நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலின் வாக்குகள் முற்றாக எண்ணப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டி தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 87.65% வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. பொதுவாக யாழ் மாவட்டத்தில் அநேகமான தொகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சராசரியாக 80% ற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், உடுப்பிட்டி
நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில், வாக்குகள் முற்றாக எண்ணப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் 14 ஆசனங்களைக் கைப்பற்றி இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில், இதுவரை அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதையடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டித்துறையை அண்டிய பகுதிகளில் பட்டாசு வெடிச் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையின் சிரமதானப்பணி நேற்று நடைபெற்றது, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானம் சுமார் 7 மணிவரை நீடித்திருந்தது . பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் பலர் இச்சிரமதானப்பணியில் கலந்து கொண்டிருந்தனர். கடந்த சில வாரங்களில் சுமார் 1 லட்சத்து 30
இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பானது யாழ்பாணம் வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் மிகவும் சுறுசுறுப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருகின்றது. வல்வெட்டித்துறை மற்றும் இதனை அண்டியுள்ள பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களாக தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயம்................
வல்வை தீருவில் விளையாட்டுக்கழக அங்கத்தினர் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று லண்டனில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, லண்டன் தீருவில் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்துள்ளனர். தீருவில் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சி பற்றி இவ் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதானமாக கலந்துரையாடவுள்ளதால் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.