Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் இன்று (13-07-13) காலை ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா வரும் 22-07-13 அன்றும் அதனைத் தொடர்ந்து பூங்காவனமும் நடைபெறவுள்ளது.
யாழ் பல்கலைகழக மாணவர்கள் அணி மற்றும் வல்வை விளையாட்டுக் கழகம் மோதும் 5 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி இன்று பிற்பகல் 06:30 மணியளவில் நடைபெறவுள்ளது. எமது (Valvettithurai.org) அனுசரணையுடன் நடைபெறவுள்ள இப்போட்டி வல்வை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வுகளில் மூத்த வல்வை விளையாட்டு வீரர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி, போலிஸ் உத்தியோகஸ்தர், நெடியகாட்டு இளைஞர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டு வீரர்களை கணபதி படிப்பகப் பாலர்கள் கைலாகு கொடுத்து வரவேற்றிருந்தனர். ரூபா 50/- நுழைவுக் கட்டணம் ஆக இருந்தும் மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி வைரவர் ஆலய மகோற்சவம் இன்று (13-07-13) காலை ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா வரும் 22-07-13 அன்றும் அதனைத் தொடர்ந்து பூங்காவனமும் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள CDC எடுப்பதில் வழங்கப்பட்டுள்ள சலுகை பற்றி எடுத்துரைக்கப்படும் என அறியமுடிகின்றது. CDC (Continuous Discharge Certificate - மாலுமிகள் சான்றிதழ்) பெறுவதற்கு க.பொ.த (சா/த) ஐ இலங்கை அரசாங்கம் தற்பொழுது கட்டாயம் ஆக்கியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்களின் வீடு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அறியவருகின்றது. நேற்றையதினம் நகரசபைத் தவிசாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்கள் கொழும்பு சென்றிருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவரின் கணணி திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று இரவு (12-07-13) மின்னொளியில் நெடியகாட்டு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆசியுரையை திரு. தண்டாயுதபணிக தேசிகர் அவர்களும், வரவேற்புரையை முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும், தற்போதைய நகரசபை உறுப்பினருமான திரு.M.K.சிவாஜிலிங்கம்....
சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் (CWN) நடத்தபபட்ட கணிதப்போட்டி 2013 இன் பெறுபேறுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளிவருகிறது. இக்கணிதப்போட்டிக்கு 1247 மாணவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். பரீட்சை பெறுபேறுகளை பெறும்நிலையங்களின் நேர அட்டவணை www.cwnmathschallenge.co.uk இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திசபை மற்றும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (VAISWA) இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட தொடரின் அரை இறுதியாட்டங்கள் நேற்று இரவு (10-07-13) மிகப்பிரமாண்டமான மின்னொளியில் நடைபெற்றது. இப் போட்டிகளில் வடமராட்சி அணிகள் வெளியேறி இறுதிப் போட்டிக்கு வலிகாமம் அணிகளே முன்னேறியுள்ளன.
யாழ் மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான ஹாட்லி கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று தொடக்கம் வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. ஹாட்லி கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 4ஆம் திகதி விசேட முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவ் விளையாட்டுக்கழகம் வெளிக்கழகங்களுக்கான பல விளையாட்டுக்களை எதிர்வரும் தினங்களில் நடாத்தவுள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளை இணைந்து கப்பற்துறை சம்பந்தமான கருத்தரங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 0900 மணியளவில் வல்வெட்டித்துறை மத்திய நவீன சந்தை கட்டடத்தின் நடாத்தப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி, இவ் விளையாட்டுக் கழகம் நடாத்திவரும் தொடர் போட்டிகளின் ஒன்றான மென்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று வல்வெட்டித்துறை நெடியகாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதிக் கால் இறுதியாட்டங்கள் நேற்று (08-07-13) இரவு மின்னொளியில் நடைபெற்றது.
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென்அண்டநிஷ் விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வெட்டித்துறையிலுள்ள மதவடி கடற்கரையில் ராட்சத சுறா மீனொன்று கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வல்வெட்டித்துறையிலுள்ள மதவடியைச் சேர்ந்த செல்வராசா என்பவரது வள்ளத்தில் பிடிபட்ட இந்த சுறா மீனானது சுமார் 20 அடி நீளம் மற்றும் 5 - 6 அடி அகலமும் 5-6 தொன் நிறை கொண்டது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டங்கள் நேற்று இரவு மிகப்பிரமாண்டமான மின்னொளியில் இரவு நடைபெற்றது.
மொறட்டுவு பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழருவி (கலை விழா) இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியளவில் ஆரம்பித்திருந்த இந்த விழாவில் அரங்கம் நிறைய பார்வையாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இப்பரிசளிப்பு விழா நிகழ்விற்கு திரு.நடராசா சுந்தரம் (Ex dean, Faculty of Management studies, University of Jaffna) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினரைக் கெளரவிக்கும் நிகழ்வு பாண்ட் வாத்தியங்கள் சகிதம் நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வீதியில் இருந்து ஆரம்பித்திருந்தது.
இச் சேவைகளின் மூலம் சமுதாயத்தில் இனம் காணப்படாத ஏழை மக்கள், விதவைப்பெண்கள், கல்வியைத் தொடர்வதில் கஷ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்கள், முன்பள்ளிகள், அதில் கல்வி பயிலும் சிறார்கள், பாடசாலைகள், தொண்டர் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், சைவத் தொண்டர்கள் என பலதரப்பட்டோர் பயன் அடைகின்றனர்.
தொண்டமனாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 ஓவர்களைக்கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் இன்று காலை தொண்டமனாறு கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இக் கால் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" ஆனது வரும் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது என நகரசபை வட்டாரங்களிலிருந்து வல்வெட்டித்துறை.org ற்கு தெரியவருகின்றது. இது சம்பந்தமான முடிவுகள் நேற்றைய (05-07-13) நகரசபை உறுப்பினர்கள் மட்டத்திலான கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வை ஆதிசக்தி முன்பள்ளியின் 26ம் ஆண்டு நிறைவையொட்டி பாலகர்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று பிற்பகல் 0300 மணியளவில், வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் ஜூலை முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள் மற்றும் வல்வை மகளீர் மகா வித்தியாலய மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் நாடாத்தப்பட்டுவரும் நேற்றைய ஆட்டத்தில் புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக்கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
திரு.வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்கள் வல்வையின் குறிப்பிடத்தக்க முதலாவது அடையாளமாவார். வல்வெட்டிதுறையானது திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடமென்பது வெளிப்படயானவொன்று. மேலும் ரெலோ (TELO) ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.குட்டிமணி அவர்களும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
நகரசபை வட்டாரங்களிலிருந்து valvettithurai.org கிடைத்த தகவல்களின் பிரகாரம், இத்திட்டமானது 2012 ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் அமைவதால், இவ் நிர்மான வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், திட்டத்தைப் பூர்த்தியாக்க சுமார் 8 மாதங்கள் (சித்திரையிலிருந்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.