27ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி (பாப்பா அன்ரி)
பிறப்பு : 3 ஏப்ரல் 1946 — இறப்பு : 24 ஏப்ரல் 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை,இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்களின் 27ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
எமது தாயாரின் மரணசெய்திக்கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் இறுதிக்கிரியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும், இறுதிஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 20-05- 2016 வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் உள்ளஅம்மா மண்டபத்தில் நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வீட்டுநிகழ்விலும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.