அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - பரமகுருசாமி சரோஜினிதேவி
தோற்றம் : 22 - 06 - 1937 மறைவு : 06 - 05 - 2016
எங்கள் குடும்பத் தலைவி சுகயீனமுற்று வைத்தியசாலையில் இருந்த பொழுதும், அவர் எங்களை விட்டுப் பிரிந்த துயரச் செய்தி கேட்டு அருகில் இருந்து உடலாலும் உள்ளத்தாலும் துணை நின்றோருக்கும் நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறி துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், உண்டி கொடுத்தொருக்கும், உடனிருந்து அவ்வப்போது தேவையான எல்லா உதவிகளையும் செய்தவர்களுக்கும், பூமாலைகள் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலிப் பிரசுரங்களைப் பிரசுரித்தவர்களுக்கும், இணைய தளங்களினூடாக தமது அஞ்சலிகளை பிரசுரித்தவர்களுக்கும், மரணக் கிரியை மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் எமது தாயாருக்கு இறுதி வரை திறம்பட சிகிச்சை அளித்த St George's (Tooting) வைத்தியசாலையின் தாதிகள் வைத்தியர்கள் உட்பட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் 04/06/2016 அன்று எமது இல்லத்தில் நடைபெறும் அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்..
மிகப் பெருந் திரளான உற்றார், உறவினர், நண்பர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமையால் தனித்தனியே அழைக்க இயலாமைக்கு வருந்தி, இதனையே அழைப்பாக ஏற்று குற்றம் குறை பாராமல் அன்பு உள்ளங்கள் அனைவரையும் வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.