செல்வச்சந்நிதி வேலன் திருத்தலத்திலே தைப்பூசத் திருநாள் 27/01/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. வேலன் திருமுன்னிலையில் உரிய மண்டபத்திலே பூரண கும்பங்கள் ஓர் ஒழுங்கிலே வைக்கப்பட்டு பிரதம பூசகரால் அர்ச்சிக்கப்பட்டன. ஆறு வகை வில்வங்களாலும், பல்வகை மலர்களாலும் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றமை சிறப்பம்சம் ஆகும்.
பத்தொன்பதுவயது பிரிவினருக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரின் அரை இறுதியாட்டங்கள் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது ஆட்டத்தில் வல்வை உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் மோதியது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 3ம் வருட நீதியியல் (Finance) மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா மேற்கொண்டு வல்வெட்டித்துறை, தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலயம், தொண்டமானாறு பெரிய கடற்கரை மற்றும் வல்வை பொது விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களுக்கு வருகை தந்தனர்.
2012 க. பொ . த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமது பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த எண்ணம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன்.
வெளியாகியுள்ள 2012ம் ஆண்டுக்கான க.பொ த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலன் கணிதப் பிரிவில் 3A பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன. இத் தகவலைப் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும் எதிர்வரும் 09.02.2013 சனிக்கிழமை அன்று காலை பத்து மணியளவில், வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் அமைந்துள்ள வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் நடைபெறவுள்ளது.
வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி தற்பொழுது வல்வை நெடியகாடு இளைஞர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த சுற்றுப்போட்டியானது லீக் முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும்விழா 23/11/2012 அன்று நடைபெற்றது. இக்கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்கான நிதி உதவியை வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்கள்டமிருந்தும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
எமது இணையதளம், தனிப்பட்ட எம்மவர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. எமது இணைய தளம் எந்தவொரு அமைப்பின் கீழும் செயற்படவில்லை. ஆனாலும் பலரது ஆதரவுகள் உண்டு, நிதி நீங்கலாக, இது தற்பொழுது அவசியமும் அல்ல. வல்வெட்டித்துறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எமது இணையதளம் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே...
வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை (Valvai) விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணல்காடு (Sen antanesh) விளையாட்டுக் கழகம் மோதியது.
வல்வெட்டித்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகாசபைப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03/02/2013) அன்று காலை 10.30 இற்கு ஆலய முன்றலில் நடைபெறவிருக்கின்றது.
தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை மத்திய வங்கியின் வங்கித்தொழில் உதவியாளர்களுக்கான (பயிலுநர்கள்) விண்ணப்பங்கள் இலங்கை மத்திய வங்கியினால் கோரப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப்படிவங்களை மாத்தறை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மாத்தளை, திருகோணமலை, இராஜகிரிய போன்ற இடங்களில் பொற்றுக்கொள்ளலாம்.
வல்வை சிதம்பரக்கல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
வேம்படி உடையாமணலில் இயங்கி வரும் கல்விக்கூடத்தில் இலவச கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறைக்கான (Maths Workshop) ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29-01-2013) மாலை 5;00 மணிக்கு நடைபெறவுள்ளது. இங்கு வாரநாட்களில் விசேட ஆங்கிலப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
உடுப்பிட்டி இளைஞர்களால் நேற்று 80 பட்டங்கள் ஒன்றுடன் ஒன்று வரிசையாக தொடுத்து ஏற்றப்பட்டது. இப்பட்டங்கள் அனைத்தும் ஒரே அளவான அகல உயரத்தைக் கொண்டது. சிறப்பம்சமாக பச்சை மஞ்சள் நிறங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறையிலும் அதனை அண்டிய பிரதேசத்திலும் அமைந்துள்ள பாடசாலைகளில் 2013ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் ஆரம்பகட்ட போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் ஆண்கள் பாடசாலையில் (American Mission Boys School) நாளை இல்லங்களுக்கிடையிலான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
பதவிகள் வெற்றிடத்திற்கான இலங்கை அரசின் வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 14 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பல தரப்பட்ட வெற்றிடத்திற்கான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வல்வை அம்மன் கோவிலடியில் புதிதாகக் கட்டி, முடிவுக்கு வரும் நிலையில் உள்ள, புதிய நகர சபைக் கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக வல்வை நகர சபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப் போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
VEDA கல்வி நிலையமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வல்வையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. இத்தகைய வளர்ச்சிக்கு வல்வையின் நலன் விரும்பிகள் உறுதுணையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் VEDA நிர்வாகத்தினர் தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
வல்வை சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர்களால் சர்ச்சைகுரியது என அவர்கள் கருதும் 'வேட்புமனுத்தாக்கல்' தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது, அதன் விபரம் பின்வருமாறு .
சென்னையில் வருடாவருடம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் BAPASI (Booksellers and Publishers Association of South India)யினால் நடாத்தப்படும் 36 வது புத்தகக் கண்காட்சி இம்முறை சென்னை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரியில் 11/01/13 தொடக்கம் 23/01/13 வரை நடைபெற்றுவருகின்றது.
தைப்பொங்கல் தினத்தன்று இரவு மக்கள் பட்டாசு மற்றும் வாணம் கொளுத்தி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வல்வெட்டித்துறை வேம்படி சில்லாலை பகுதியில் விடப்பட்ட குருவி வானம் ஓன்று தென்னை ஒன்றின் வட்டில் அகப்பட்டதால் தென்னை எரிய ஆரம்பித்தது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த பெரியவர்களாலும் , இளைஞர்களாலும் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த விநாயக முகூர்த்தங்கள் எடுக்கும் வைபவம் தைப்பொங்கல் தினத்தில் மாலை பொழுதில் சிறப்பாக நடைபெற்றிருந்தது