முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டுள்ள 'War Museum' மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் அப் பிரதேசங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தங்குமிடம் எனக் கருதப்படும் பாதுகாப்பான மறைவிடத்தைப் பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதிக்கபட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுகழகம் மோதியது.
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரில் இன்று இரு போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக மைதானத்தில் நடைபெற்றன.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (28/11/12) வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை சிவன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் 'சொக்கப்பானை'எரித்தல்,மற்றும் சுவாமி வீதி வலம் வருதலையும் படங்களில் காணலாம்.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை அம்மன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற 'சொக்கப்பானை' எரித்தல் நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
இப்புதிய நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது. இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி திரு.R.பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி ஆகும்.
திருக்கார்த்திகை விளக்கீடாகிய நாளை (கார்த்திகை 27) இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயங்களில் 'சொக்கப்பானை' எரித்தும், மற்றும் வீடுகளில் நெய்ச்சுட்டிகளிலிலும், வாழைத் தடல்களில் தீபம் ஏற்றியும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும் யாழ் தீபகற்பத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும், வல்வெட்டித்துறை உட்பட, இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. தொடர் மழை காரணமாக வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த இறுதியாட்டம் 20 பந்து பரிமாற்றத்தினை (20 Overs) கொண்டது. வழமைக்கு சற்று மாறாக இந்த பந்துபரிமாற்றம், இறுதியாட்டத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த ஆட்டம் முடிவடைந்த பின் பெண்களுக்கான சிநேகபூர்வ 5 பந்துபரிமாற்றத்தை (5 Overs) கொண்ட மென்பந்தாட்டபோட்டி நடைபெற்றது.
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது.
நடைபெற்ற கந்தசஷ்டியின் 6 ஆம் நாள் வல்வை சிவன் கோவிலிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மற்றும் தேவர்களின் தூதரான ஹென்துருவர் ஆகியோர் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
இந் நிகழ்வின் மேலதிக படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இன்று இராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளதாக இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கார்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை The Free Press Journal எனும் ஆங்கிலப் பத்திரிகையில் ஆரம்பித்த திரு.பால் தாக்ரே, 1960 களில் 'மார்மிக்' எனும் தனது சொந்த வாராந்த இதழை ஆரம்பித்து பின்னர் 'சாம்னா' எனும் தினசரிப்பத்திரிகையை நடாத்தி வந்தார்.
இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
வல்வெட்டித்துறை மதவடிஉதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தின் வேலைப்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது.
பருத்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 350 கடல்மைல் தொலைவில் தாழமுக்கம் ஒன்று நிலை கொண்டுள்ளது. இதனால் யாழ் தீபகற்ப கரையோரங்களுக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவுமில்லை.
செய்மதியிலுருந்து எடுக்கபட்ட தாழமுக்கத்தின் வடிவினைப் படத்தில் காணலாம்.
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வல்வையில் ஒரு கல்யாண மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள தர்மகர்த்தா சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வல்வையில் அமையவுள்ள முதலாவது கல்யாண மண்டபம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு சுமார் 6 மணியளவில் நிறைவெய்தியது.
நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' யைச் சிறப்பாகக் காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெறவுள்ளது.
தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தினால் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டியானது, உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் 14 / 01 / 2013 (திங்கட்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.
யாழ் கோட்டை தற்போது பார்வைக்கு அனுமதிகப்பட்டிருப்பதுடன் 'தொல்பொருள் சொத்தாகவும்' (Archaeological heritage' இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
செல்வசந்நிதி கோயிலில் கடந்த நான்கு நாட்காளாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டி வழிபாடுகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாளான நாளை முருகன் சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்கள் அருள் பாலிப்பார். இங்கு முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
வல்வை வேம்படி உடையாமாணலில் இயங்கி வரும் கல்விக் கூடத்தில் இலவச 'கணித வகுப்புப் பயிற்சிப்பட்டறை' (Maths Workshop) இன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புப் பயிற்சிப்பட்டறை மாலை நேரம் வரை நடைபெறவுள்ளது.
வடமாரட்சியின் நன்னீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படும் நீர்த் தாங்கிகளில் ஒன்று தொண்டமானாற்றில் செல்வசந்நிதி கோயிலுக்கு அருகாமையில், ஆற்றங்கரைக்கு எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
வல்வையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆரம்ப கட்டமாக நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.