பத்தாவது ஆண்டில் கால்பதிக்கும் valvettithurai.org இனை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கின்றேன்.
வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட் பிரதேச செய்திகளையும், மற்றும் பிற முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் உலகறியச்செய்யும் ஒரோயொரு வல்வையின் இணையத்;தளம் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் வல்வையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளைப்பற்றிய செய்திகளை எதுவித பேதமுமின்றி நடுவுநிலையாக தொடர்ந்து 9 வருடங்களாக பிரசுரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளும் வல்வையில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிவதற்கு ஏதுவாக ஓர் உறவுப்பாலமாகவும் திகழ்வது மேலும் ஓர் சிறப்பம்சமாகும்.
மேலும் நாளாந்த செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி செய்திகளுக்கு மேலதிகமாக வல்வையின் செய்திகளை அறிவதற்காக பலராலும் தினமும் சில பல தடவைகள் நோக்கப்படும் ஓர் இணையத்தளமாகும். அந்தவகையில் நானும் தினமும் குறைந்தது இரு தடவைகளாவது இத் தளத்தினை பார்வையிடுவது வழக்கம்.
வெறுமனே செய்திகள் மாத்திரமின்றி ஆன்மீகம், வரலாறு போன்ற அனைத்து வல்வையின் சிறப்புக்களையும் மரபுகளையும் தாங்கிநிற்கும் இவ் இணையத்தளம் மென்மேலும் பல ஆக்கங்களையும் வரலாற்று ஆவணங்களையும் உள்ளடக்கி வல்வையின் இலத்திரனியல் ஆவணக்காப்பகமாக மிளிர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிவஞானவேல் மதுசூதனன் (BIT, PGDE, Dip in Teaching) ஆசிரியர் - யா வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை
தலைவர் - கணபதி படிப்பகம்
பொருளாளர் - கணபதி மஹால் வலிந்துதவு சமூகசேவை அபிவிருத்துக் குழு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.