பத்தாவது வருடத்தில் வல்வெட்டித்துறை.ORG - பத்து வருடங்களாக சிறப்பாக சேவையை ஆற்றிவரும் தளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2021 (வெள்ளிக்கிழமை)
(10 ஆவது வருடத்தில் Valvettithurai.ORG)
இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான மக்களின் வாழ்வானது பிறந்தது ஓரிடம், வளர்ந்தது வேறிடம், தற்பொழுது வாழ்வது இன்னோர் இடம் என்கின்ற ரீதியில் தான் அமைந்துள்ளது. அவ்வாறு வாழ்ந்தாலும் கூட சொந்த ஊர் என்று வரும் போது அதற்கான அபிமானமும், கூடவே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவாவும் எல்லோரிடமும் இருக்கின்றது. இன்று அந்த தேவை பூர்த்தி செய்யப்படுவது இணைய தளங்களாலயே !
10 வருடங்கள் முன் தொழில்நுட்பம் கண்டிப்பாக இப்போது உள்ள அளவில் பிரகாசமாக இருந்திருக்க முடியாது. ஆனாலும் அந்த நேரத்தில் Valvettithurai.ORG என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு வல்வையின் பல்வேறு நிகழ்வுகளையும் புலம்பெயர்ந்து வாழும் வல்வையர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இந்த 10 வருடங்களில் இந்த இணையதளமானது இன்னும் பெருகூட்டப்பட்டு, பல தரப்பட்ட விடயங்களையும், புகைப்படங்களுடன் பதிவிட்டு, உலகளாவிய ரீதியில் பிரதேச மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைப் பெற்று, தன் சேவையை சிறப்பாக ஆற்றி வருகின்றது.
வெளிநாட்டில் மட்டுமல்லாது ஊரிலேயே இருப்பவர்கள் கூட சில வேளைகளில், பல செய்திகளை இந்த இணையதளத்தின் ஊடாக தான் தெரிந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மை.
எங்கள் ஆனந்த யோகாலயாவின் வளர்ச்சியிலும் Valvettithurai.ORG இன் பங்கு மிக முக்கியமானது. யோகாலயாவின் மாணவர்களின் திறமைகள் இந்த இணையதளம் மூலமாக வெளி உலகிற்கு தெரியவந்ததை அடுத்து எங்களுக்கான ஆதரவும், இக்கலை பயிலுவதில் பலரிடம் ஆர்வமும் அதிகரித்தது என்பதும்மறக்க முடியாத உண்மை. அதற்காக எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த இணையதளமானது ஆண்டவனின் ஆசியுடனும், மக்கள் அனைவரின் பேராதரவுடனும், இன்னும் பல ஆண்டுகள் செல்வ சிறப்பாக சேவை செய்ய மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
Capt.S.Bashkkaran. (Srilanka)
Posted Date: October 08, 2021 at 09:48
வல்வெட்டித்துறை.orgம் ஆனந்த யோகாலையாவும் எந்த வியாபார நோக்கமும் இன்றி சேவையாகவே கருதி நடைபெற்று வருகின்றன. அவர்கள் வரும் தடைகளை எல்லாம் தாண்டி பல தசாப்தங்களைக் காண வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதையே ஆண்டவனிடம் எங்கள் பிரார்த்தனையாக வைப்போம்.
நன்றி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.