10 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG - பத்தாண்டு கடந்து பயணிக்கும் நம் வல்வெட்டித்துறை.ORG
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2021 (வெள்ளிக்கிழமை)
பத்தாண்டு கடந்து பயணிக்கும் நம் வல்வெட்டித்துறை.ORG
ஒரு சஞ்சிகையோ புத்தகம் ஒன்றையோ நாம் வெளிக்கொண்டு வரும் போது, அடுத்த பதிப்பு வெளிவருவதற்கு நாம் கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றோம் . ஆனால் தினமும் பல்வேறுபட்ட எமக்கு தேவையான சிறப்பான அம்சங்களைத் தாங்கி, பத்து வருடமாக இயந்திர உலகிலே பயணிப்பது என்பது போற்றுதளுக்குரிய விடயம்.
ஆரம்பித்த காலத்திலே வல்வை என்ற எமது ஊரின் தற்கால மற்றும் பாரம்பரிய செய்திகளை தாங்கி வந்த வல்வெட்டித்துறை.Org ஆனது, தனது சேவையினை பரந்து பட்ட அளவில் தமிழ் தெரிந்த எல்லோருக்கும் வழங்கி வருவது போற்றுதற்குரியது.
உண்மையான செய்திகளை, தகவல்களை நாம் அனுப்பும் போது பிரசுரிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஊட்டிய தளங்களில் குறிப்பிடத்தக்கது வல்வெட்டித்துறை.Org.
எமது ஊரின் பாரம்பரிய விழுமியங்கள் தொட்டு, கலை, கலாச்சாரம், கல்வி, விளையாடு, பாய்மரப் பயணங்கள் தொட்டு, இன்றைய நவீன கப்பல் போக்குவரத்து என தன் சேவையை அதிகரித்து இன்றைய உலகச் செய்திகளையும் தனது பதிப்பிலே மெருகூட்டி வீறு நடை போடுகின்றது என்றால் மிகையாகாது.
தொழில்நுட்பம் சம்பந்தமான தகவல் மேலு அதிகரிக்கப்பட்டு எமது இளம் சமுதாயம் பல பயிற்சிகளை, கல்வி அறிவைப் பெற்று வீறு நடைபோடவும் எமது வல்வெட்டித்துறையின் ஒற்றுமை என்பது எல்லோரிடமும் நிலைத்து நிற்க தன்னாலான சேவைகளைத் தந்து பல்லாண்டு காலம் புதுப்பொலிவுடன் இன்று போல் என்றும் வாழ்க என்று இப்பத்தாவதாண்டில் வாழ்த்த சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.
இத்தளத்தை இயக்கி வரும் ஸ்தாபகர்கள் மற்றும் உதவி செய்து வரும் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
கார்மேகம் வசந்தன் (அவுஸ்த்திரேலியா)
முன்னாள் தொண்டர் ஆசிரியர் சிதம்பரக்கல்லூரி
முன்னாள் தலைவர் வல்வை நலன்புரிச் சங்கம் (அவுஸ்திரேலியா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.