அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
About writer: Valvettithurai.org web team
அதிக சத்ததுடன் கூடிய பாடல்கள், ஓசைகள் போன்றவற்றை கேட்பதால், உலகில் 1 பில்லியனுக்கும் அதிகமான சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தமது செவிப்பறைகளின் பாதிப்புக்கு ஆளாகின்றார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO) அறிவித்துள்ளது.
WHO வின் மதிப்பீட்டின் படி, இதில் அரைப் பங்கானோர் 12 தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்டோர் ஆக இருப்பதுடன், அதிக வருமானங்களை கொண்டுள்ள நாடுகளில் வசிப்போர் ஆவார். ஏனைய 40 வீதமானோர் இரவு கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் தமது கேட்கும் திறனை தொலைப்பவர்கள் ஆவார்கள்.
வல்வை சிவன் பழைய கோபுரத்தில் ஒலிபெருக்கி, மிக மெல்லிய ஒலியுடன் மாத்திரம்
இவர்கள் பாவிக்கும் ஒலி கருவிகள் (Personal audio devices) மற்றும் நவீன Smart phones போன்றவைகளில் அடங்கியுள்ள மிதமிஞ்சிய ஒலி அளவே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக கடுகதி வேகத்தில் இளைஞர்கள் கேட்கும் திறனை இழந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள WHO, இழந்த கேட்கும் திறனை மீள பெறமுடியாது என்பதை நினைவில் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும்
தெரிவித்துள்ளது.
ஐ.நா வின் சுகாதார அமைப்பின் (UN health agency) ஆய்வின் படி 85 decibels மேற்பட்ட சத்தத்தை தொடர்ந்து 8 மணித்தியாலங்கள் கேட்பதும், 100 decibels மேற்பட்ட சத்தத்தை தொடர்ந்து வெறும் 15 நிமிடங்கள் கேட்பதும் ஆபத்தானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வாகன நெரிசல்கள் கொண்ட வேளைகளில் வீதிகளில் எழும் ஒலியானது 85 decibels அளவை அடைவதாக WHO மேலும் தெரிவிக்கின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற உலக கிண்ண கோப்பை உதைபந்தாட்ட போட்டியின் போது, பாவிக்கப்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற ஒலி கருவியான Vuvuzela ஆனது 120 decibels அளவு சத்தத்தை ஏற்படுத்தவல்லதென்றும், இதை வெறும் 9 செக்கனுக்கு மேல் கேட்டாலேயே செவிப்பறைகள் பழுதாகும் என்றும்
WHO மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அபாயத்தை கருத்திற் கொண்டு, சகல நாட்டு அரசாங்கங்களும் பொது இடங்களில் உண்டாகும் அதீத ஒலிகளை கட்டுப்படுத்தும் வகையில் மிகவும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும் என்று WHO தெரிவிக்கின்றது. அது சரி எமது பிரதேசங்களில் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஒலி பெருக்கிகளில் இருந்து வெளியாகும் சத்தம் எத்தனை decibels ஆக இருக்கும்.