பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
About writer: வல்லை மாமாச்சி (சோ.செ.தெய்வச்சந்திரன்)
ஆலடித்தம்பிக்கு அருகாமையில் மல்லிகைத்தெருவில் வாழும் பாக்கியம் பெற்றய்.
வீர வீதியாம் மல்லிகைதெருவில் பிறந்து தவழ்ந்து வாழும் பாக்கியம் பெற்றாய்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் வல்வையின் வாசத்தில் பெரிதும் ஆவணப்படுத்த விரும்பி என்னிடம் புகைப்படங்கள் எடுத்து தரும்படி கேட்ட பதிவுகள் சிலவற்றில் ரேவடி வைரவரும் ஆதிவைரவரும் அடங்கும்.
என் இளமைக்காலத்தில் எம் ஊராம் ஊறணியில் இருந்து ஊரிக்காடுவரையில் உன் கரகப்பாடலும் ஊடுக்கு இசையும் புனிதர் குச்சம் ஆனந்தி அண்ணாவுன் இணைந்து இசைத்த அதிர்வுகள் இன்றும் வல்வைக்காற்றுடன்; கலந்துதான் இருக்கின்றது.
வல்வையில் அன்னபூரணிக்கப்பலைப்போல் நூற்றுக்கணக்கான பாய்மரக்கப்பலேடிகளின் பாதம் பட்ட கடற்கரையில நடந்த காத்தவராயர் நாட்டுக்கூத்து காவியத்துக்கு உன் பங்கு அளப்பரியது.
உங்கள் காத்தவராயன் கூத்துக் கலைஞர்களின் வரிசையில் வந்தவர்கள்தான் இங்கிலாந்து தேசத்தில் 2002 ஆண்டில் உலக வல்வையர் ஒன்றியத்தால் சிங்கப்பூரில் இருந்து உலகமெல்லம் கப்பல் ஓட்டிய வல்வையர் தாமோதரம்பிள்ளை மணிக்கவாசகர் அவர்களை கௌரவிக்கும் விழாவில் காத்தவராயர் காவியத்தை சிறப்பித்து இருந்தார்கள்.
நாம் வணங்கும் ஆதிபகவான் எம் பெருமானின் கையில் இருக்கும் ஒரு வாத்தியம் உடுக்கு வாத்தியம்தான்.
மா கலைஞனாக கலாபூசனாக வல்வை வரலாறு உங்களை பதிந்து செல்லும்.
புலம்பெயர்ந்த வல்வைக் கலைஞர்களின் சார்பில்
வல்லை மாமாச்சி (சோ.செ.தெய்வச்சந்திரன்)
லண்டன்
பிற்குறிப்பு
ஆக்கத்தின் பெரும் பகுதி தவிர்க்க முடியாத காரணத்தால் பிரசுரிக்கப் படமுடியவில்ல, மனம் வருந்துகின்றோம்