எமது பிரதேசத்தில் உள்ள பிரதான பிரச்சனைகளில் முதன்மையானது வேலையில்லாப் பிரச்சனை - படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து இளைஞர், யுவதிகளும் எதிர்நோக்கும் பிரச்சனை இது.
இங்கு பல்கலைக்கழகம் படிப்பு முடிந்த இளைஞர்களுக்கும் சில, பல வருடங்களாக வேலை இல்லை. பிறகு ஏன் இங்கு படிக்கவேண்டும் என்ற மனநிலையை தோற்றுவிக்கக் கூடிய விடயம்.
தவிரவும் பிரதேச இளைஞர்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து செல்லத் தூண்டும் காரணிகளில் பிரதான ஒன்றாகவும் இது இருந்து வருகின்றது.
இவை ஒரு புறமிருக்க கமம், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களையடுத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடியவை அரச மற்றும் தனியார் துறைகள்.
யாழைப் பொறுத்தவரையில் தனியார் துறை என்பது இன்னும் வேலைவாய்ப்பை கொடுக்கக் கூடியளவிற்கு விருத்தியடையாத ஒன்று.
அரச துறையைப் பொறுத்தவரை, அரச நிர்வாக முழுமையாக இயங்குவதால் இத் துறையில் வேலை, சில வேலை வாய்ப்புக்களுக்கான ஏது நிலைகள் உள்ளது எனலாம்.
அரசதுறைகளில், அரச வேலை வாய்ப்பை ஒட்டி நடாத்தப்படும் போட்டிப் பரீட்சைகள் மற்றும் NVQ கற்கைநெறிகள் போன்றவற்றில் தேறியவர்களுக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளை விட வேலைவாய்ப்பு கிடைத்துவருகின்றது போல் தெரிகின்றது.
அவ்வாறான (கிராம சேவையாளர்களுக்கான) போட்டிப் பரீட்சை ஒன்றில் தேறி, கிராம சேவையாளராகத் தெரிவாகி கடந்த வாரம் வல்வெட்டித்துறை வட மத்திப் பிரிவுக்கு கிராம சேவையாளராகத் தெரிவானவர் தான் தம்பி ரமணன்.
குறிப்பிடக்கூடிய விடயம் யாதெனில் தம்பி ரமணன் , யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவிலும் பட்டம் பெற்றவர் என்பது.
Degree க்குச் சமாந்தரமாக பயணித்து, Degree யை மாத்திரம் நம்பியிராமல் வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டார்.
சாமர்த்தியசாலி என்றெல்லாம் புகழத் தேவையில்லை. இது ஒரு சாதாரண விடயம் தான். ஆனாலும் கட்டாயம் சுட்டிக் காட்டப்படவேண்டிய ஒன்று – எமது ஏனைய இளைஞர் யுவதிகளும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக.
வெறும் A/L கலைப் பிரிவு சாதாரண சித்திகளுடன் தோற்றக் கூடிய பரீட்சை தான் செல்வன் ரமணன் எழுதியது. இது பற்றிய விழிப்புணர்வு (Carrier guidean) மிகவும் காட்டமான முறையில் ஊரில் செய்யப்பட வேண்டும்.
O/L, A/L படித்த பின்னர் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள ஏராளமான கற்கை நெறிகள் உண்டு. அவற்றில் பிரதானமானவற்றில் ஒன்றுதான் NVQ கற்கை நெறிகள்.
காலையில் தலைநகர் கொழும்பில் குறித்த ஒரு பஸ் தரிப்பு நிலையத்தில் NVQ ரீசேட் அணிந்த இளைஞர் யுவதிகளை தினம் தோறும் பார்க்கின்றேன்.
வல்வையில் NVQ கற்கை நெறிகளை பகிரதப் பிரயத்தனத்தில் மத்தியில் நடாத்துகிறார்கள். சில NVQ கற்கை நெறிகளுக்கு அடிப்படைக் கல்வித் தகமைகள் கூட தேவையில்லை. ஆனாலும் இங்கு NVQ கற்கை நெறிகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. தன்னார்வளாராக முன்னின்று நடாத்துபவர்கள் நொந்து போகின்றார்கள் எப்படி இதை எப்படி ஊரில் இளைஞர் யுவதிகளிடம் கொண்டுப் போய்ச் சேர்க்க முடியும் என்று.
இலங்கையைப் பொறுத்தவரையில் வேலை வாய்ப்பை பொறுத்தவரை மிகவும் பெறுமதியான ஒன்றாக இந்த NVQ அமைந்துள்ளது.
தென்னிலங்கையில் வந்து வேலை வாய்ப்பை பெறுவதில் ஆங்கில, சிங்கள மொழிகளிலும் (ஆர்வம் காட்டாமல்) பின் நிற்கும் இளைஞர் யுவதிகள் கெட்டியாக பிடிக்க வேண்டியவை இந்த போட்டிப் பரீட்சைகளும், NVQ கற்கை நெறி போன்றவற்றையும் ஆகும்.
ரமணனின் சகோதரிகளையும் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும்.
ஒரு சகோதரி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும், இன்னொரு சகோதரி சுண்டுக்குளியில் உள்ள சிறுவர் நீதிமன்றில் தட்டச்சாளராகவும், மற்றொரு சகோதரி மருந்தங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பாளாராக (வார்டன்) உள்ளனர்.
குறிப்பிடக் கூடிய விடயம் யாதெனில் இவர்களின் தந்தை அரச காரியங்களில் காலடி கூட வைத்திருக்காத ஒரு தொழிலாளி என்பது.
ஊரில் இப்பொழுது அரச துறைகளில் பணிகளுக்குச் சேர்பவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் அருகி வருகின்றது பலரும் ஆதங்கப்பட்டு வருகின்றார்கள்.
ரமணனின் முயற்சி ஒரு ஆறுதல் தரும் விடயம் ஆகவும் ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: October 21, 2018 at 18:10
மிக சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி ரமணன் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.