பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலட் ஞானம்)
வேம்படி, வல்வெட்டித்துறை.
அள்ளித் தந்த அன்பும் அரவணைப்பும் நாளும் நெஞ்சைக் குமைந்து கொல்ல எமை தவிக்க விட்டுப் போனதேனோ திசையின்றி நடுக்கடல் கப்பலானோம்
அப்பாவின் செல்லமெல்லோ நாங்களப்பா ஐயோவென அழுது அழுது துடிக்கின்றோம் ஆருக்கும் கிடைக்காத அப்பாவே பொக்கிக்ஷமே அல்லாடிச் சிரிப்பின்றி அனாதையாய் போனோமே
யாவுமே நீங்கள் தான் என்றிருந்தோம் ஆசைத் தோழனாய் வாய்த்திருந்தீர் காலம் முழுதும் கைகோர்ப்பீரென்றிருக்க எமைத் தவிக்கவிட்டுப் பறித்தவன் யார்
தந்தையாய்த் தனயனாய் கணவனாய் சோதரனாய் உயிராய் உறவாய் உணர்வாய் நண்பனாய் நீயிருக்கக் கடவுள் தந்த வரமென்றோம் கணப்பொழுதில் கலிவந்த மாயமென்ன
கனவிலேனும் வருவாயென்றே வாழ்கின்றோம் கதியற்ற வாழ்வாகி வருசமொன்றானதுவே கண்மணியே நீயெமக்குக் கடவுளய்யா காலமெல்லாம் துணையிருப்பாய் எம்முயிரே
உங்கள் ஆத்ம சாந்திக்காகக் கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
மனைவி (மாலா), பிள்ளைகள் (மது, வாணி), பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு மாலா-மனைவி — பிரித்தானியா தொலைபேசி: +442086486528