வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுந்தர் நகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்களின் முதலாண்டு நினைவு நாள் 17/05/2014 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
தோற்றம் 23/05/1925 மறைவு 27/05/2013
வாடி ஒழுங்கை,வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுந்தர் நகர் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
சோதிமுத்து பெற்றெடுத்த சொக்கத் தங்கமே!
ஐயா சுந்தரமூர்த்தி கைப்பிடித்த சந்திர வதனமே!
கோடி மாரி கால்பதித்த வாடி மண்ணின் மூத்தவளே!
கோமகளே! நீ போனதனால் எங்கள்
வாடி ஒழுங்கையும் இன்று வாடிப் போனதே.
.
ஏழு வர்ணம் நீ வரைந்தாய் உன் மணி வயிற்றில்
வானவில்லாய் நாம் பிறந்தோம் இந்த வல்வை மண்ணில்
ராஜநாமம்! சூட்டி வைத்தாய் எங்கள் ஏழு பேருக்கும்
நாடாளும் ராஜாக்கள்! நாங்களே என்றாய்.
திரவியங்கள் தேடி, நாங்கள் திரை கடல் சென்றோம்
தடுக்காமல் தைரியம் தந்து வழி அனுப்பினாய்
விரைந்து சென்ற நாம் திரும்பி வரத் தாமதித்தால்
நுரை தள்ளும் கரையோரம் இரையோடு காத்து நின்றாய்.
சொத்து சுகம் சேர்த்து வைத்தோம் பத்திரமாய் உனைக் காக்க
இப்போ சித்தம் கலங்கிப் போனதம்மா உத்தமி நீ இல்லையென்று
அம்மா நீ இல்லை என்றால் அத்தனையும் சும்மா என்று தோன்றுதம்மா
எங்களுக்குச் சுட்டு விரல் சுண்ணாம்பும் சொந்தமில்லை என்று ஆனதம்மா.
இருள் மேகம் எமைச் சூழ்ந்து அடி வானமும் இருண்டதம்மா