11-04-2013 வியாழக்கிழமை காலை 11.00மணிக்கு துவாரோகண (கொடியேற்றம்) மங்கள நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது. மகோற்சவத்துடன் தொடர்புடைய கிரியைகள் 10-04-2013, 11-04-2013 என்ற அடிப்படையில் துவாரோகண தினத்திலும் இதற்கு முதல் நாளிலும் முறைமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
10-04-2013 யில் மகோற்சவ விழா தொடர்பான கிரியைகள் ஆரம்பமாகி முலமூர்த்தி அனுஞ்ஞை, உற்சவமுர்த்தி அனுஞ்ஞை என்ற அடிப்படையிலே ஏனைய கிரியைகளும் மேற்கொள்ளப்படும்.
11-04-2013காலையிலே துவாரோகணம் தொடர்பான ஏனைய கிரியைகள் மேற்கொள்ளப்படும். இரட்சாபந்தனம்,வசந்தமண்டப பூசை,அஸ்திர தேவருடன், துவசபட பிரதக்ஷிணம், மூலகும்ப பூசை, தம்பப்பிரதிட்டை, துவசபடஅபிடேகம் ஆகியன உள்ளடங்களாக கிரியைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டு,பகல் கொடியேற்ற மங்கள நிகழ்வு நடைபெறும்.
கொடியேற்ற நிகழ்வு நிறைவெய்திய நாளை தொடர்ந்து ஏனைய விழாக்கள் ஒன்றன்பின் ஒன்றாக தீர்த்தம் வரையில் நடைபெறும்.
தொடர்ந்து வரும் 8ம் நாள் (8ந் திருவிழா ) மிருக யாத்திரை எனப்படும். வேட்டைத்திருவிழா இறைவனுடைய எண் குணங்களையும் விளங்கச் செய்து ஆன்மாவின் பசுஞான, பாச ஞானங்களையும் நீக்கியருளுதல் இதன் மூலம் ஆன்மாவிடத்து அமைந்துள்ள மிருககுணங்கள் அழிக்கப்படுகின்றன.
9ந் திருவிழா பாம்புத்திருவிழா அம்பிகை, விநாயகர், முருகன் யாவரும் பாம்பு வாகனங்களில் வந்தருளி அடியார்களுக்கு அருள்புரிவார்கள்.
10ந் திருவிழா வசந்தோற்சவவிழா (பூங்காவனம் ) சிறப்புற அமைக்கப்பட்ட பூங்காவிலே அம்பிகை அடியார்களுக்கு திரு ஊஞ்சலிலே உல்லாசமாக ஆடிய நிலையிலே காட்சி கொடுத்தருளுவார்.
மேற்கொள்ளப்பட்டபின் தமக்கென அமைக்கப்பெற்ற அலங்கரிக்கப் பெற்ற தேரிலே அம்பிகை ஆரோகளித்து, வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள் சுரந்திடுவார். அம்பிகை தேரிலே வீதிவலம் வந்த்ருளிய பின் ஆரோகளித்த நிலையிலேயே பச்சை சாத்தி அடியார்களிக்கு அருள்புரிந்த பின் தமது அமர்விடம் நோக்கி செல்வார். மாலை காத்தவராயர் பூசை.
25-10-2013 தீர்த்தோற்சவ விழா ஆன்மாக்கள் தமது எல்லையில்லா கருணை வெள்ளத்தில் மூழ்கி இன்பநிலை எய்தவேண்டும் என்ற தன்மையில் அம்பிகை ஊறணி தீர்த்ததில் போய்த் தீர்த்தம் ஆடியருளுவார். இரவு கொடியிறக்கல், பிராயசித்த நிகழ்வு, ஆசாரிய உற்சவம் ஆகியன நடைபெறும்.
அம்பிகையின் 2013ம் வருட மகோற்சவ கால அருளாட்சி இவற்றுடன் நிறைவெய்தும்.