Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

பெண் கப்பல் முதலாளியான சின்னத்தங்கமும், வாழ்ந்த காலத்திலேயே கட்டப்பட்ட அவரின் அரிய சமாதியும்

பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013
About writer: Web Team, Valvettithurai.org
வல்வெட்டித்துறையின் மயிலியதனை ஊரிக்காடு பிரதேசங்களுக்கிடையிலமைந்துள்ள மண்ணாச்சி மணல் பகுதியில் அமைந்துள்ள பெண் கப்பல் முதலாளியான அமரர் திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம் என்பவருக்கு சமாதி ஒன்று உள்ளதையும், அதன் சீரமைப்புப்பணிகள் கடந்த சில வாரங்களாக அவரது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தது பற்றியும் நேற்றைய எமது செய்தியில் பிரசுரித்திருந்தோம். கீழே தெரிவிக்கப்பட்டுள்ளவை சின்னத்தங்கம் பற்றிய சிறு குறிப்பொன்றாகும். 
 
வல்வையின் இயற்றமிழ் போதகாசிரியர் சங்கர வைத்திலிங்கம் பண்டிதர் காலத்தில் கப்பல்கள் பல வைத்திருந்து தூரதேச பெரு வர்த்தகங்களில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் திரு.விஸ்வநாதர் அவர்கள். அன்னாரின் மறைவைத் தொடர்ந்து அதே கப்பல் வர்த்தகத்தையும், மேலும் வல்வையில் இந்துத்துவத்தையும் கட்டி எழுப்புவதில் பாடுபட்டவர் விஸ்வநாதரின் மகன் சரவணமுத்து அவர்கள்.
 
திரு. சரவணமுத்து அவர்களின் திடீர் மறைவைத் தொடர்ந்து, இப் பணிகளைப் பொறுப்பேற்று நடாத்தியிருந்தவர் தான் சமாதிக்குரிய சின்னத் தங்கம் அவர்கள். இவர் வல்வையின் பெரும் முதலாளிகளில் ஒருவரான வைரமுத்து அவர்களின் மகளும் சரவணமுத்து அவர்களின் மனைவியுமாவார்.
 
மதுரை மீனாட்சி, சுபத்திரையம்மா மற்றும் சோமசுந்தரம் போன்ற பல கப்பல்களைத் தன்னகத்தே வைத்திருந்து தூரதேச கப்பல் வாணிபத்தைத் தொடர்ந்திருந்தவர் சின்னத் தங்கம் அவர்கள். 
 
கப்பல் வாணிபத்துடன் மட்டும் நின்று விடாது, வல்வையில்  இந்து சமயப் பணிகளிலும் அதிகம் ஈடுபட்டிருந்த இவர், தனது கப்பல்கள் வல்வெட்டித்துறைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் முன்னர் வழிபாட்டிற்காக தனது மனையிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் நறுவிலடி விநாயகர் ஆலயத்தை கட்டுவித்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.
 
கப்பல் வாணிபம், இந்துசமயப்பணி  என்று நின்று விடாது புணறுக்கலட்டி, சீராவரைக்கலட்டி, வெள்ளையன் கலட்டி, கொக்குத்திடல், மண்ணாச்சி மணல் வடக்கு, திக்கத்தியவரவை, புளயீட்டார், கணக்கரோடை, வடக்கு மணல் போன்ற இடங்களில் தோட்டங்களையும் நிர்வகித்து வந்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன் ஊரிக்காட்டில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் வழிப்போக்கர்கள் தங்கிச்செல்வதற்காக ஒரு மடத்தையும், சுமைதாங்கிக்கல் ஒன்றையும் அமைத்திருந்தார். 
 
இவ்வாறாக கப்பல் வாணிபம், சமயப்பணி, பொதுச்சேவைகள் என, பெண்களுக்கென தேவையற்ற கட்டுப்பாடுகள் நிறைந்திருந்த அந்தக்காலத்தில் ஒரு பெண்ணாக நின்று உதாரணம் படைத்த சின்னத் தங்கம் அவர்கள் 1933 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காலமானார். 
 
காலமுற்ற பின்பும் சரித்திரம் படைக்கும் வகையில், அவரினாலேயே ஸ்தாபிக்கப்பட்ட சமாதியில் சின்னத்தங்கம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பு 
படத்தில் காட்டப்பட்டுள்ள இச் சமாதியானது, சின்னத் தங்கம் அவர்கள் தான் வாழ்ந்த காலத்திலேயே நீதிமன்ற அனுசரணையுடன் கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
 
திருத்தியமைக்கப்பட்டுள்ள சின்னத் தங்கம் அவர்களின் சமாதி 
 
 
சமாதி அமைந்துள்ள வீதி,
[இது வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் கடல் மட்டத்திலிருந்து உயரமான நிலப்பகுதியாகும் (Higher Elevation)]
 
சமாதியின் பழைய தோற்றம் 
 
 
 
ஊரிக்காட்டில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சுமைதாங்கிக்கல் 

 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
TSU (சூ) என்றால் என்ன
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai