தமிழர் நாம் - நம் குழந்தைகளுக்கு - வைத்திடுவோம் தமிழ்ப்பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2013
About writer: வ.ஆ.அதிரூபசிங்கம்
தமிழர் நாம் - நம் குழந்தைகளுக்கு - வைத்திடுவோம் தமிழ்ப்பெயர்கள்
குழந்தைகளுக்குப் "பெயர் வைத்தல்" என்பது, பெற்றோர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். குழந்தை பிறப்பதற்கு முன்பே, அக் குழந்தை ஆணாக இருப்பினும் - பெண்ணாக இருப்பினும் - என்ன பெயர் வைப்பது எனத் தீர்மானித்துக்கொள்வது எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாக உள்ளது.
குழந்தை பிறந்தபின்பு, சோதிடம் பார்த்து, எண்களை மனதிற்கொண்டு, எண்களின் கூட்டுத்தொகை அடிப்படையிலே அதிட்ட எண்ணைத் தெரிவு செய்தும், பெயரின் முதல் எழுத்து எதுவாக அமைதல் வேண்டும் எனத் தீர்மானித்தும் பெயர் வைத்தலும் எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது.
இச் சந்தர்ப்பங்களில் ஆண்பால விகுதிகளான அன், ஆன் மற்றும் ஒன் என்பனவற்றுள் ஏதாவது ஒன்றும் பெண்பால் விகுதிகளான அள்,ஆள், இ ,ஐ என்பனவற்றுள் ஏதாவது ஒன்றும் பெயரின் ஈற்றெழுத்தின் இறுதியில் ஒலி நயம் பயப்பக்கூடியதாகப் பெயர்களைத் தீர்மானித்தலும் பெயர் வைத்திடும் விடயத்திலே கருத்திலும், கவனத்திலும் கொள்ளப்படுதலும் ஒரு வழக்கமாக உள்ளது.
குழந்தைகளுக்குப் பெயர் வைத்திடும் சந்தர்ப்பத்தில் நம் பெற்றோர்களின் பெயர்களையோ அல்லது அவர்தம் பெயர்களை அடியொற்றியோ பெயர் வைத்திடுதலும் எம்மவர் சிலரிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது. மறைந்த எம் முன்னோர்களின் நினைவுகள் நின்று நிலவும்படி அவர்தம் பெயர்களையோ அல்லது அவர்களின் பெயர்களின் ஒரு பகுதி வைத்திடும் பெயருடன் இணைந்ததாகவோ பெயர் வைத்தலும் எம்மிடையே காணப்படும் வழக்கமாகவும் உள்ளது.
பெயர் வைப்பதற்கான காரணம் எதுவாக இருப்பினும் தமிழர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழிலே பெயர் வைத்திடுதல் எமது பாரிய கடமையாகும். எமது மொழிப்பற்றின் வெளிப்படையாகவும் அமையும். பிறந்த எமது குழந்தைகளுக்காகக் கொள்ளப்படும் ஒரு புனித நிகழ்வாக கொள்ளப்படும். இந்நிகழ்வு எமது மொழியுணர்வுடன் கூடியதாக அமைந்திருத்தல் வரவேற்கக்கூடியதல்லவா!.
நாம் விரும்பும் சில பெயர்கள் வடமொழி எழுத்துக்கள் பொருந்தியதாக இருப்பின் அவ்வெழுத்துக்கு மாற்றான தமிழ்மொழி எழுத்து அமைந்திடும் தன்மையில் பெயரைத் தீர்மானித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்குப் பெயர் வைத்திடும் பொழுது, கல்வி செல்வம், வீரம், என்றமைந்த தன்மைகள் பொருந்தியதாக எம்மாற் கொள்ளப்படும் வழிபடு தெய்வங்களை மனதிற்கொண்டும், இயற்கை சக்திகளை மனங்கொண்டும், அவற்றுக்கு முதன்மை கொடுத்தும் பெயர்களை வைத்தல் எம்மிடையே பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமாக உள்ளது.
வழிபடு கடவுளருக்கு முன்னுரிமை கொடுத்திடும் நாம் எமது வழிபடு தெய்வங்களை மனதிற்கொண்டு அவற்றுக்கு முதன்மை கொடுத்து அவர்களுக்காக அமைந்துள்ள பெயர்களை மனங்கொண்டு நாம் விரும்பிய வகையிலே குழந்தைகளுக்குப் பெயர் வைக்கலாம்.
எமது சமய நோக்கியே சிவனுக்காக அமைந்துள்ள சிறப்புப் பெயர்கள்:-