2012ம் ஆண்டிற்கான வல்வை விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள்- ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2013
About writer: Web team of Valvettithurai.org
2012ம் ஆண்டிற்கான வல்வை விளையாட்டுக் கழகத்தின் சாதனைகள்- ஒரு பார்வை
விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தடகளம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், எல்லே ஆகியவற்றிற்கான போட்டிகளில் சாதனைகள் படைத்ததுள்ளது. 2012ம் ஆண்டிற்கான சாதனைகளாக இவை பதியப்பட்டுள்ளது.
வல்வையின் சாதனைப் பயணம் பின்வருமாறு.
ஒவ்வொரு வருடமும் பருத்தித்துறை பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்டுவரும் பல போட்டிகளில், வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது . அதன் விபரம் பின்வருமாறு,
ஜெ .உதயகுமார் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட அணிக்காக தெரிவு செய்யப்பட்டார்
* கரப்பந்தாட்டத் தொடரில் பல வருடங்களுக்கு பின் வல்வை விளையாட்டுக் கழகம் சம்பியனானது. இந்த போட்டி வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வல்வை கரப்பந்தாட்ட வீரர்கள் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதியினை பெற்றனர். இவர்களில் வல்வை விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ஜெ .உதயகுமார் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட அணிக்காக தெரிவு செய்யப்பட்டார்.
* 5 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டி வரை வல்வை விளையாட்டுக் கழகம் முன்னேறியது. எனினும் இறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தோல்வியடைந்து, இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது
* பெண்களுக்கான உதைபந்தாட்ட தொடரில் வல்வைப் பெண்கள் அணியினர் இறுதி வரை முன்னேறினார்கள். இறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்திடம் தண்ட உதையில் தோல்வியடைந்து, இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது.
* ஆண்களுக்கான 'எல்லே' போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் அரை இறுதியாட்டத்தில் இதுவரை காலமும் சாம்பியனாக இருந்த பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை, 4: 2 என்ற புள்ளியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றியிட்டியது. எனினும் இறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியடைந்தது.
ஈட்டி எறிதலில் மயூரன் தான் நிகழ்த்திய சாதனையை முறியடித்து புதிய சாதனையை மீண்டும் படைத்தார்.
* தடகளப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் பலசாதனைகளை நிகழ்த்தியது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த ம .மயூரன் 2011 ம் ஆண்டு தான் நிகழ்த்திய சாதனையை முறியடித்து புதிய சாதனையை (49.88 மீற்றர்தூரம்) நிகழ்த்தினார்.அத்துடன் வல்வை விளையாட்டுக் கழகம், தடகள போட்டியின் புள்ளிகளின் வரிசையில் பல வருடங்களுக்கு பின் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது.
இவ்வாறு வருடத்தின் தொடக்கத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியதன் மூலம் புத்துணர்வு பெற்ற வல்வை விளையாட்டுக் கழகம் தனது சாதனைப் பயணத்தை கடந்த வருட ஆரம்பத்தில் மட்டுமின்றி கடந்த வருடம் பூராகவும் நிகழ்த்திக்காட்டியது. அதற்கான சான்றுகள் பின்வருமாறு:
வல்வை விளையாட்டுக் கழக மென்பந்தாட்ட அணியினர் பல வெற்றிகளை சுவீகரித்தனர். அந்தவகையில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகம் நடாத்திய 12 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரில் வல்வை விளையாட்டுக் கழகம் பல வருடங்களுக்கு பின் சம்பியனானது.
இந்த வெற்றியின் காரணமாக வல்வை விளையாட்டுக் கழகம், இதற்கு பின் நடைபெற்ற மென்பந்தாட்ட தொடர்களில் பல வெற்றிகளை பெற்றது. அதன் விபரம் பின்வருமாறு.
1.வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நாடத்திய மென்பந்தாட்ட தொடரில் நான்காமிடம்
2. தும்பளை நாவலர் விளையாட்டுக் கழகம் நாடத்திய மென்பந்தாட்ட தொடரில் இரண்டாமிடம்
3. மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்ட தொடரில் இரண்டாமிடம்
4. பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்ட தொடரில் இரண்டாமிடம்
மதுராந்தன் 1 ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தினார்.
இதைவிட வல்வை விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த மதுராந்தன் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 1 ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தினார்.
உதைப்பந்தாட்டத்திலும் பல வெற்றிகளை வல்வை அணி பெற்றுக் கொண்டது
மென்பந்தாட்டத்தில் மட்டும் இன்றி உதைப்பந்தாட்டத்திலும் பல வெற்றிகளை வல்வை அணி பெற்றுக் கொண்டது. அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
1. புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகத்தினால் யாழ். மாவட்டத்தின் முன்னணி கழகங்கள் பங்கு பற்றிய உதைபந்தாட்ட தொடரில் பலவருடங்களுக்கு பின் அரை இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. எனினும் அரையிறுதியாட்டத்தில் தோல்வியடைந்தது.
2. அடுத்து 21 வயது உதைபந்தாட்ட அணியினர் பருத்தித்துறை பிரதேசசெயலகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரில் முதன்முதலாக சம்பியனானது.
இது போன்ற பல சாதனைகளை கடந்த வருடத்தில் நிகழ்த்திக்காட்டியது வல்வை விளையாட்டுக் கழகம், இந்த வருடத்தில் மேலும் பல சாதனைகளை செய்து, மேலும் பல வீரர்களை உருவாக்க வேண்டும்
தொகுப்பு - Web team of Valvettithurai.org / Valvettithurai