பொங்கலோ.....பொங்கல்..... 2013.
பொங்கல் வந்தது ....;பொங்கல் வந்தது ....;பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடப் பொங்கல் வந்தது;
தை ஒன்றிலே மலர்ந்திடும் தைப்பொங்கல் ;தைதிருநாள்; தரைமொழுகிக் கோலமிட்டு
மாவிலை தோரணம் ஆங்கசைய கலம் தாங்கிட அடுப்பமைத்துப் புதுக்கலம் அதிலேற்றி
பகலவன் முகம் நோக்கிக் கலம் அமைய பகலவனும் கலம் நோக்க
கலத்தினுட் பால் பொங்கிடும் பொலிவு கண்டு பகலவன் முகம் மலர
செந்நெல்லரிசியுடன் இனிய பலபண்டங்கள் சேர்த்திட்டு நலமுதாக்கி
பகலவனுக்கே படையல் செய்து படையலில் பங்கேற்று சுற்றம் சூழ ஆங்கமர்ந்து அமுதுண்போம்
மண் சார்ந்த நிகழ்வெல்லாம் தாம் அணைக்க
எம்மவரின் விண் கலக்கும் நிகழ்வு கண்டு நாம் களிப்போம்
கடலுடன் கலந்து நிற்கும் வென்மணற் பரப்பிலே
நாமமைந்து பட்டங்கள் பறக்கவிடும் பெருவழக்கம் எம்மவரின் பொது வழக்கம்
பொங்கல் உண்டு களித்த நாம் பட்டங்கள் பறக்கவிட்டும் பொங்கலில் மகிழ்வோம்.
கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம், B.A