வல்வை குழவிகள் கலா மன்றம், ராஜேந்திரன் மற்றும் பட்டப் போட்டி - ஒரு சிறு விவரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2013
About writer: Web team of valvettithurai.org
தைப் பொங்கல் தினத்தன்று (14.01.2013) வல்வை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
இப்பட்டப்போட்டியில், வல்வை குழவிகள் கலா மன்றத்தால் உருவாக்கப்பட்டிருந்த பிரமிட், தும்பி, ஸ்பைடர்மேன், பறக்கும் தட்டு, சனிக்கிரகம்,ரைட் சகோதாரர்களின் விமானம் ( Srilanka Air line ), சூரியன் ஆகிய ஏழு விநோதமான பட்டங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வை குழவிகள் கலா மன்றம், வல்வையில் அண்மைக்காலத்தில் நடந்தேறிய பல கலையம்சங்களில் பிரசன்னமாகியிருன்கின்றது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து பிரசன்னமாகிக்கொண்டிருகின்றது.
இக் கலாமன்றத்தின் வியக்கத்தகு ஒருங்கிணைப்பாளர் திரு.வெற்றிவடிவேல் ராஜேந்திரன்ஆவார். இவருக்கு உறுதுணையாக திரு.மகேந்திரன், இன்னும் சிலர் மாத்திரமே.
திரு.வெற்றிவடிவேல் ராஜேந்திரன் ஒரு பல்கலைக் கழக பட்டதாரியாவர். ஒரு சிறந்த ஓவியர். தற்பொழுது ஆசிரியர் தொழில் புரிந்துவரும் இவர், பகுதி நேரமாக பல (தொழில் நுட்பத்துடன் கூடிய) வேலைகளைச் செய்து வருகின்றார்.
சிற்பம் அமைப்பதில் (sculpture) கை தேர்ந்த இவர், கடந்த வருடம் யாழ்.தொண்டைமனாற்று வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் ஒரு சிற்பத்தைச் செய்துள்ளார். இது தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், நவீன மிகச் சிறிய பாய்மரக் கப்பல் ஒன்றை செய்திருந்தார்.
வல்வையில் நடைபெறும் பல வினோத உடைப் போட்டிகளில், எப்பொழுதும் தனக்கே உரிய பாணியில் பல புதுமைகளைப் புகுத்தும் இவர், அண்மையில் வல்வை ரேவடி விளையாட்டுக் கழகத்தின் வினோத உடைப் போட்டி நிகழ்வில், முதல் இடத்தைப் பிடித்திருந்தார். மேலும் கடந்த ஆங்கிலப் புத்தாண்டில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர் நடாத்திய கலை விழாவிலும் இவரின் குழுவினர் தமது திறமையை வெளிப் படுத்தியிருந்தனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வல்வெட்டித்துறையில் கோலாகாலமாக வருடா வருடம் நடை பெற்றுவரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தத் திருவிழா அன்று நடை பெற்று வரும், இந்திரவிழாவிலும் இவரின் பங்கு அளப்பெரியது.
3 மாதங்களின் பின்னர் நடைபெறவுள்ள இந்திர விழாவுக்கு இவர் தற்பொழுதே தமது குழுவினரை தயார்ப்டுத்துகின்றார். இவ்வாறாக கலைகளுக்குள் மறைந்திருந்து, வல்வையர்களாகிய எம்மை ஆனந்தப் படுத்தி, வல்வையின் பெருமையைப் பறை சாற்றும் இவர், வல்வையர்களாகிய எம்மால் மேலும் சிறந்த முறையில் ஊக்கிவிக்கப்படுத்தப் படவேண்டியவர் ஆவார்.
தற்போதைய போக்குக்கேற்ப ஒரு இணைய தளத்தையும் (Blogspot) இவர் நடாத்தி வருகின்றார்.
வல்வை ரேவடி விளையாட்டுக் கழகத்தின் வினோத உடைப் போட்டி - முதலாவதாக வந்த ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் - ராஜேந்திரனும் மகேந்திரனும்
வல்வை குழவிகள் கலா மன்றத்தின் குழுவினர்
குழவிகள் கலாமன்றத்தின் முதல் 10 இடங்களுக்குள் வந்திருந்த பிரமிட், தும்பி, ஸ்பைடர்மேன், பறக்கும் தட்டு, சனிக்கிரகம்,ரைட் சகோதாரர்களின் விமானம் ( Srilanka Air line ), சூரியன் ஆகிய ஏழுவிநோதமான பட்டங்கள்
ஸ்பைடர்மேன்
சூரியன்
பட்டத்துடன் நிற்பவர் திரு.ராஜேந்திரன்
பிரமிட்
தும்பி
சனிக்கிரகம்
குழவிகள் கலாமன்றத்தின் மற்றைய இரு உறுப்பினர்களான திரு.மகேந்திரன் மற்றும் ஆனந்தகோடி
பறக்கும் தட்டு
ரைட் சகோதாரர்களின் விமானம் ( Srilanka Air line )
தொகுப்பு - Web team of valvettithurai.org / Colombo