வல்வெட்டித்துறை சிவபுரவீதியை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா நீலாயதாட்சிஅம்மா 24.11.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வை முத்துமாரி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா சிட்னியை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் தம்பிராசா பொன்னுச்சாமி அவர்கள் இன்று 23 கார்த்திகை 2021 காலமானார்.
வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த அமரர் இராசசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா/ கட்டி மேத்திரியார்) அவர்களின் துணைவியார் திருமதி.ஞா.வனிதாதேவி அவர்கள் 14.11.2021 அன்று இயற்கை எய்தினார்.
தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வேம்படியை வதிவிடமாகவும் கொண்டு, தற்பொழுது காட்டுப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி சிவயோககுரு அவர்கள் இன்று காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு 3 ஆம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினவேலாயுதம் தனலட்சுமி (தனம்) அவர்கள் காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ராணியம்மா ஞானவேல் அவர்கள் 19/10/2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா ) அவர்கள் 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி கலந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், சுதுமலையை (தற்போது Canada) வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற இலங்கை விற்பனைத் திணைக்கள அதிகாரியாக பணியாற்றிய திரு பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் கனடாவில் காலமானார்.
யாழ் வல்வெட்டித்துறை நடராஜா வீதியைச் சேர்ந்தவரும் அண்மையில் கொழும்பை வதிவு இடமாகக் கொண்டவரும் ஊரில் மருந்து கட்டிய பழனி அப்பாவின் அன்பு மனைவி அம்பிகாரத்தினம்(சொர்ணம்) 02/10/2021 சனிக்கிழமை மாலை தனது 88வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்தவரும் தற்பொழுது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முருகுபிள்ளை பிறேம்நாத் (வூட்நாத், குகன்) அவர்கள் செவ்வாய்கிழமை (14-09-2021) அதிகாலை 01.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வல்வெட்டித்துறையை வதிவிடங்களாகக் கொண்டிருந்தவருமான திரு. தர்மமச்சந்திரன் செல்வசந்திரன் அவர்கள் 06.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை ஊரிக்காடு (மயிலியதனை MP ஒழுங்கை) வதிவிடமாகவும், தற்போதைய முகவரி அரசம்புலம் வல்வெட்டித்துறையை (மாதா கோவிலடி) இருப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிட்ணசாமி சந்திரலிங்கம் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி அவர்கள் நேற்று (07.08.2021) இறைபதம் அடைந்தார்.
யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டக்கட்டை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (முன்னாள் பொலிகண்டி மேற்கு, கிராமசேவையாளர்) நேற்றையதினம் 05/08/2021 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.