தட்டி பஸ்ஸும் மரப் பாலமும்-மறந்த பெயர்களும் மறவாத நினைவுகளும் – வல்வையூர் அப்பாண்ணா
தட்டி பஸ்ஸும் மரப் பாலமும்
பருத்திதுறையிலிருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு ஊடாக கீரிமலை வரையுள்ள கரையோரப் பாதையில் “தட்டி வான்” ஓடியதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்குமுன் தொண்டைமானாறு மரப் பாலத்தினூடாக
தட்டி பஸ் ஓடியதை நீங்கள் அறிவீர்களா?
தட்டிவான்
இந்த தட்டி பஸ் “தபால் பஸ்” என்றும் அழைக்கப்பட்டது. தட்டி வான் போன்ற அதே அமைப்புடன் – பின்புறம் நீண்டு – மேற்புறம் தட்டையானது இந்த பஸ்.
சாரதியின் இடமருகே இருவர் அமர்ந்து கொள்ளலாம். சாரதியின் இருக்கையின் பின்புறம் நால்வர் அமரக் கூடிய, நீண்ட இரு பலகை இருக்கையின் நடுவேயுள்ள, அரைக்கதவினூடாகவே பயணிகள் ஏறி இறங்க வேண்டும்.
அம்மன் கோவிலுக்கு வடக்காக தற்பொழுது திருமண மண்டபம் அமைந்துள்ள அதே இடத்தில்தான் தபாற் கந்தோர் இயங்கிவந்தது. “வீட்டுக்கு ஒரு அரச ஊழியர்” என்று சொல்லுமளவிற்கு அரச ஊழியர் ஊரில் நிரம்பியிருந்தனர் அந்த காலத்தில் எம்மூரில்.
பழைய தபார் கந்தோர் இருந்த இடம்
காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தபால் புகையிரதத்தைப் பிடிப்பதற்காக, நம்மூரவர் பலரும் இந்த தட்டி பஸ்ஸில் பயணம் செய்வர். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை தபாலகங்களில் சேகரிக்கப்படும் தபாற்பொதிகள் அனைத்தும் சாரதியின்
பின்புறம் உள்ள இருக்கையில் நிரம்பி வழியும்.
அம்மன் கோவிலடியிலிருந்து, அந்த நாளைய ரப்பர் ஹோனிலிருந்து “பீ.......பீ....’ என சத்தத்தை எழுப்பியபடி தட்டி பஸ் புறப்பட்டு தொண்டைமானாறு பழைய பாலத்து இக்கரையில் தரித்து நிற்கும்.
“பழைய பாலம் வீதி” என்னும் பெயருடன் தொண்டைமனாற்றுச் சந்தியில் மேற்கு நோக்கி ஒரு வீதி பிரிந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். இவ்வீதியின் 100 மீட்டர் தூரத்தில் நம்மூரவரும் பிரபல நில அளவையாளருமான காலஞ்சென்ற
ஆற்றின் குறுக்காக முழு பனை மரக்குற்றிகள் நாட்டப்பட்டு, அதன்மீது கனதியான பலகைகள் பரவப்பட்ட மரப்பாலம் அக்கரையில் முடிகின்றது.
மரப்பாலத்தில் பஸ் தரித்து நின்றதும் சாரதியையும் நடத்துனரையும் தவிர ஏனைய அனைவரும் இறங்கி பாலத்தின் மேலாக நடந்துசெல்லவேண்டும்.
அழிந்துபோன பழைய மரப்பாலம்
மரப்பாலத்தின் இடைவெளிகளுடாக கீழே ஆற்று நீரை பார்த்தபடி மிகுந்த அவதானத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்துப் பாலத்தை கடப்பது ஒரு தனி அனுபவம்.
தட்டி பஸ் “தட............தடா” என்னும் சத்ததுடன் பாலத்தின் மீது பக்குவமாக ஊர்ந்து அக்கறை சேர்ந்து நிற்கும். முழுப் பாரத்துடன் பாலத்தின் மீது பஸ் பயணிப்பது ஆபத்தானது என்பதால் இந்த ஏற்பாடு.
உரிய இடம் போய்ச் சேருவதற்கு முன்பாக பஸ்ஸின் ரேடியேற்றுக்கு, நடத்துனர் 4 முறையாவது நீர் நிரப்புவது வேடிக்கையான தினசரி காட்சியாகும்.
அக்கரையில் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு “முக்கி முனுகியபடி” பலாலி – மயிலிட்டி வீதி ஊடாக காங்கேசன்துறைப் புகையிரத நிலையத்தின் உட்புறம் வரை சென்று பஸ் தரித்துநிற்கும்.
இங்கு பயணிகளையும் தபாற் பொதிகளையும் இறக்கிய பின், பஸ் கீரிமலைவரை சென்று இதே மரப் பாலம் வழியாக மீண்டுவரும். (மரப்பாலம் இருந்தமைக்கான மிச்சம் மிகுதிகள் இக்கரையிலும் அக்கரையிலும் இருப்பதை இன்றும் கூட
நாம் காணலாம்.
திரு.அப்பாத்துரை மாஸ்டர்
பழைய மரப்பாலம் (பாலம் இல : 1) பழுதடைந்து வந்த காரணமறிந்து மரப்பாலத்திற்கு தெற்காக கட்டப்பட்ட உறுதியான சீமெந்துப் பாலம் (பாலம் இல : 2) கடந்தகால வன்செயல் காரணமாக சேதமாக்கப்பட, இராணுவத்தினர் அப்பாலத்தைத் திருத்தியமைத்து தமது தேவைக்காக மட்டும் பாலத்தை பயன்படுத்திவந்தனர்.
மீண்டும் மிக அண்மைக் காலத்தில் அந்த பழைய சீமெந்து பாலத்திற்கு மேலும் தெற்காக, மிக உறுதியான – வசதியான, நேர்த்தியான சீமெந்துப் பாலம் (பாலம் இல : 3) அமைக்கப்பட்டு போக்குவரத்து தற்பொழுது மிக மிக இலக்குவாக்காப்பட்டுள்ளது.